ஜெ
சுந்தரம் என்பவரின் கடிதம் வாசித்ததும்தான் விதுரன் வைத்திருக்கும் வைரம் எத்தனை பெரிய குறியீடு என்று தெரிந்தது. அதை பாண்டு விதுரருக்கு சும்மா கொடுக்கிறார். அதை அவ்ர் வைத்திருக்கிறார் என்பதே ஞாபகம் வரவில்லை
பாண்டு ஏன் விதுரருக்குக் கொடுத்தார்? விதுரரின் மனதின் அடியாழத்தில் இருந்த ஆசை அவருக்கு தெரிந்திருந்ததா? அவர் அதைக் கொடுத்ததில் உள்ள சிரிப்பு ஞாபகம் வருகிறது
அதோடு வைரம் என்ற சொல். வைரம் பாய்வது என்றால் இறுகி ஆழத்திலே இருப்பது.மரத்திலே வைரம் என்று சொல்கிறோம்
அதேபோல வைராக்கியம் என்ற சொல்லும் வைரத்திலே இருந்து வந்ததே. வைரம் என்றால் வன்மம் என்றும் சொல்லுக்கு அர்த்தம் உண்டு. வஜ்ர என்றால் சம்ஸ்கிருதத்தில் மிக உறுதியானது என்று பொருள்
நினைக்க நினைக்க விரிகிறது
சாமிநாதன்