ஜெ,
வெண்முரசின் பிரயாமை 57 ல் இந்த இடம் என்னை திகைக்க
வைத்த்து. எத்தனை நுணுக்கமான சந்தர்ப்பம்
இந்த அஸ்தினபுரியின் பாதிக்கு நிகராகக்
கொடுக்கப்பட்ட வைரம். அது உங்கள் அறையின் ஆழத்தில் இருந்துகொண்டிருக்கிறது. அதை
உங்களுக்கு அளித்தவர் பாண்டு. அவர் இன்றில்லை…”
“சீ, வாயை மூடு!” என்று எழுந்து அவளை அறைய கையோங்கி
முன்னால் சென்றார் விதுரர். நடுங்கும் கையுடன் அசையாமல் நின்றபின் மீண்டும்
அமர்ந்துகொண்டார். அந்த விசையில் மஞ்சம் அசைந்தது
பாதிநாடும் குந்தியின். அதை பாண்டு அவருக்கு
அளித்துவிட்டு போயிருக்கிறான். அவரது அகத்தின் ஆழத்திலே உள்ளது அந்த வைரம்
வைரம் என்பது பேராசை. ஆனால் உறுதியானது.
மண்ணுக்குள்ளே கிடப்பது. [நீங்கள் எழுதியவரிகள்தான். எங்கே என்று ஞாபகமில்லை] அதை
வைத்திருக்கிறார்
அதற்கு அஸ்வதந்தம் என்று பெயர். குதிரையின் பல். பழைய
இந்தியாவிலே குதிரைதான் ஷத்ரிய சக்தியின் அடையாளம், அதுதான் அஸ்வமேதம்
செய்கிறார்கள். ஒரு அஸ்வமேதக்குதிரையின் பல்லை வைத்திருக்கிறார் மனசுக்குள்
அதை அவர் மனைவி தொட்டுவிட்டாள். நீ அதை அடையவே
முடியாது என்று சொல்லிவிட்டாள். அதுதான் அவர் பொங்கி எழுகிறார்
ஆனால் ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால் மனைவிக்குத்
தெரியாத ஒன்றுமே இந்த உலகத்திலே இல்லை
சுந்தரம்