ஜெ
வெண்முரசு எவ்வளவு துல்லியமாக முன்னரே திட்டமிட்டு எழுதப்படுகிறது என்பதை எண்ணி வியந்த ஒரு சம்பவம். இடும்பர்களுக்குப் பாம்புதான் பயம். ஆக்வேதான் அவர்கள் மண்ணில் நடப்பதில்லை என்று வந்தது. அவர்கள் குரங்குகளைப்போல என்று காட்டுவதற்காக அதைச் சொல்கிறீர்கள் என நினைத்தேன்
ஆனால் கடோத்கசன் பிரியும் அந்த நேரத்திலும் பாம்பு பயம் பற்றிய குறிப்பிடுதல் வந்துகொண்டே இருந்தபோது ஒரு பொறிதட்டியது. அவன் கர்ணனின் நாகபாசத்தால்தானே சாகப்போகிறான். பாம்பு மட்டும்தானே அவனைக் கொல்ல முடியும். அப்படியே வியந்து போய் இதை எழுதுகிறேன்
இதுவரை எழுதியதில்லை. நான் நினைப்பதை பெரும்பாலும் சீனு, மகராசன் போன்றவர்கள் எழுதிவிடுகிறார்கள்
கேசவன்