அன்புள்ள ஜெயமோகன் சார்,
இன்று காட்டுக்குள், ஒளிந்து, துப்பாக்கி ஏந்தி போராடிக்கொண்டிருக்கும், மலைவாழ் மக்களின் குரலாகவே, இடும்பனின் பேச்சு ஒலித்தது, அதிலும்,
இடும்பன் சினத்துடன். “ஏன் இக்காட்டுக்குள் அயலவர் வரக்கூடாது, வந்தவர் திரும்பக்கூடாது என நம் முன்னோர் வகுத்தனர் என்று புரிந்துகொள். நாம் வாழும் இக்காட்டைப்போல பலநூறு காடுகள் இந்த கங்கைச்சமவெளியெங்கும் இருந்தன. அவையனைத்திலும் நம்மைப்போன்ற தொல்குடிகள் வாழ்ந்தனர். அக்காடுகள் அனைத்தும் இன்று அழிந்து ஊர்களாக நகரங்களாக ஆகிவிட்டன. அங்கே கோட்டைகளும் துறைகளும் சந்தைகளும் வந்துவிட்டன. அங்கெல்லாம் பலவண்ணங்களை உடலில் தாங்கிய மக்கள் வந்து மொய்த்து நிறைந்துவிட்டார்கள். அழுகிய ஊனில் புழுக்கள் போல அவ்வூர்களில் அவர்கள் நெரிபடுகிறார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் துரத்தப்பட்டு மலைகள் மேல் ஏறிச்சென்று மறைந்தனர். எஞ்சியவர்கள் அவ்வூர்களில் அடிமைகளாக வாழ்கிறார்கள்."""
என்கிற வரிகளில் இன்றைய மாவோயிஸ்டுகளும் , நக்சலைட்டுகளும், இடும்பனின் பிரதிநிதிகளாகவே இருப்பதாக தோன்றுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் இதுவே இன்றைய நிலையாக இருக்கிறது,
அன்புடன்
சௌந்தர் .G
அன்புள்ள சௌந்தர்
ஆம், நீங்கள் சொன்னபின் யோசித்தேன். சரியாகவே இருக்கிறது
ஜெ