Friday, December 19, 2014

ஒளிரும் வைரங்கள்



ஆசிரியருக்கு ,

இன்றைய பகுதி பிரயாகை -57, கண்ணைப் பறிக்கிறது. இது போன்ற காட்சி அனுபவத்தை நான் நேரில் அபூர்வமாகவே அடைந்துள்ளேன் , வைரம் ஒரு மெல்லிசை போல துவங்கி ஒரு orchestra போல ஒளி பரவுவது அற்புதமான அனுபவம், ஒவியாரால் இதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு கடுமையான சஞ்சலத்தில் இருக்கும் போது  காட்சி இன்னமும் ரம்மியமாகும் என படித்துள்ளேன் , டால்ஸ்டாயின் kruizer sonnata வில் இதை கண்டுள்ளேன் . இது தான் விதுரனுக்கும் நடக்கிறது . பீஷ்மரிடம் பேசியபின் விதுரன் காணும் அந்தி , மகனுடன் பேசிய பின் காணும் வைரம் , அதன் பின் உப்பரிகையில் சிவையின் இடத்தில்  இருந்து காணும் இரவு இது எல்லாவற்றிற்கும் மேலாக சுருதையிடம் பேசியபின் அவன் காணும் துருவ நட்சத்திரம்.  

இக்காட்சிகள் படிப்படியாக விரிந்து  கொண்டு போய் துருவ நட்சத்திரத்தில் உச்சமடைகிறது , துருவனும் ஒரு மிகப் பெரிய வைரமகவே ஜொலிக்கிறது .  ஏனோ dostyevesky யின் idiot இல் முதலில் மிஷ்கின், நடாஷா பிலிப்போவ்னாவின் ஓவியத்தை பார்க்கும் காட்சியுடன் ஒப்பிட்டுக் கொண்டேன்.    

 ஒரு தோட்டத்திற்கு சென்று பூக்களைப் பார்ப்பதை விட, ஒரு கோயிலுக்குச் சென்று சிற்பங்களைப் பார்ப்பதை விட  அமோகமான அனுபவம் ஒரு கருவூலத்திற்கு சென்று வைரங்களையும் படிகங்களையும்  பார்ப்பது, அதற்கும் ஒரு படி மேல் அதை எழுத்தின்  கற்பனையில் பார்ப்பது.  கீழே  ஒரு இணைப்பை கொடுத்துள்ளேன் , மேலும் சில இணைப்புகள் வந்தால் கண்டுகளிப்பேன்.  

கிருஷ்ணன்.       



https://www.youtube.com/watch?v=ObdgWYKlnms