ஜெ
கிளாஸிக்குகளில் குழந்தைக்கதைகள் ஒளிந்திருக்கும். கிளாஸிக் ஒளிந்திராத குழந்தைக்கதைகளும் இல்லை
- இது நான் படிக்கும்போது அமெரிக்கன் காலேஜ் நாயர்சார் சொல்லித்தந்த ஒரு வரி. மகாபாரதத்தை உங்கள் எழுத்துக்கள் வழியாக வாசிக்கும்போது இது தோன்றிக்கொண்டே இருக்கிறது. எங்கே அது தீவிரமான வாழ்க்கை எங்கே குழந்தைக்கதை எங்கே சாகசக்கதை என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.
காட்டுக்குள் இலைகள் வழியாக இடும்பியும் பீமனும் நீந்துவதை குழந்தைகளுக்குச் சொன்னால் அவர்கள் துள்ளிக்குதிப்பார்கள். எனக்கும் மிக உற்சாகமாக இருந்தது
ஆனால் ஒருமுறை தோன்றியது ‘இயற்கையில் திளைத்தல்’ என்ற கிளாஸிக் அனுபவத்தைத்தான் அப்படி குழந்தைக்கதையாக எழுதியிருக்கிறீர்கள் என்று.
மிகச்சிறந்த அனுபவத்தை அளிக்கும் இடங்கள் இந்த காடும் குரங்குகளும். சின்னக்குழந்தைகளுக்கு டார்ஜான் ஏன் பிடிக்கிறது என்று யோசித்தால் அதன் காரணம் இதுதான். டார்ஜான் காட்டில் திளைத்துக்கொண்டிருக்கிறார். நாமெல்லாம் காட்டில் போனால் அங்கே வெளியே நின்றுப்பார்த்துக்கொண்டிருப்போம், உள்ளே போக முடியாது. ஆனால் குரங்கு காட்டில் நீந்திக்கொண்டிருக்கும். அதைத்தான் பீமன் செய்கிறான்
இந்த அடித்தளத்தை ஆரம்பத்திலேயே போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று பார்க்கும்போதுதான் ஆச்சரியம்
பிரபாகர்