ஜெ,
துரியோதனன் கோயில் பற்றி ஒரு கடிதம் பார்த்தேன். கேரளத்தில் கொல்லம் அருகே மலநடா என்ற ஊரில் ஒரு துரியோதனன் கோயில் உள்ளது. அங்கே துரியோதனனை சாமியாக கும்பிடுகிறார்கள். எல்லாவகையான பூசைகளும் உள்ளன. துரியோதனன் ஆண்மை, பெருந்தன்மை ஆகியவை கொண்ட தெய்வ வடிவமாக வழிபடப்படுகிறார்
துரியோதனன் நாடு காண்பதற்காக இங்கே வந்தபோது இங்கே வாழ்ந்த குறவர் குடும்பம் ஒன்றில் தண்ணீர் வாங்கி அருந்தியதாகவும் அந்த நன்றிக்காக அவர்களுடன் தங்கி சிவபூசை செய்ததாகவும் தொன்மம். அவர்கள் கட்டிய கோயில் இது.
இந்தியா முழுக்க இந்த வழிபாடு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில்கூட துரியோதனன் படுகளம் என்ற கூத்து நிகழ்ச்சி உள்ளது. ராஜஸ்தானில் ஜோத்பூரில் ராவணனை கடவுளாக வழிபடுகிறார்கள்.
சிவராம்
http://keralapilgrimcenters.com/duryodhana-temple-malanada-kollam-hindu-pilgrim-festival-kerala/