அன்புள்ள ஜெ
விதுரர் நெடுமூச்சுடன் மீண்டும் கிருஷ்ணனை
எண்ணிக்கொண்டார். மக்களைப்பற்றி இத்தனை அறிந்த ஒருவன் வேறில்லை. ஆனால் அவன் மக்களை
விரும்புகிறான். அவர்களுக்காக தன் வாழ்க்கையை அளிக்கிறான். ஒவ்வொரு கணமும்
முழுமையாக மன்னித்துக்கொண்டே இருந்தாலொழிய அது இயல்வதல்ல. இந்நிலையில் அவன்
இருந்திருந்தால் என்ன செய்திருப்பான். இவர்கள் அவனை கல்லால் அடித்துக்
கொன்றிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பான்? அப்போதும் அவன் இதழ்களில் அந்தப் புன்னகை
இருந்திருக்கும்.
இன்றைய உங்கள் ஆக்கம் பெரிதினும்
பெரிது.
நீங்கள் எழுதியிருப்பது
தெய்வங்களுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல.
சாதாரண மனிதர்களுக்கும் பொருந்தும்.
ராமனின் தியாகத்தைப் போற்றுபவர்கள்
குறைவு. சீதைக்கு அநீதி;இழைத்து
விட்டார் என்பார்கள், அவரும்
தனிமையில் எவ்வளவு நொந்திருப்பார். ராஜாவாக இருந்ததால் ராஜ பரிபாலனம் என்ற
பாறாங்கல் வேறே தலை மேலே. பாவம் அவர். தனியாகவே இருந்தவருக்கு கர்பகிரஹததில்
மட்டும் கூட்டம்.
கிருழ்ணன்
எல்லோருக்கும் பண்ணி பணணி கடைசிவரை போராட்டம் தான்.
நீங்கள் எழுதிய புன்னகை என்னையும்
அதிர வைத்தது விதுரரைப் போல.
இது நான் இது வரை உணராமல் இருந்த
உணர்வு.
ஏற்கெனவே கிருஷ்ண
பித்தான எனக்கு இன்று அந்த புன்னகை இன்னும் என்னை அவன் பால் மேலும் ஈர்த்தது
மட்டுமில்லாமல் என்னை பலப் படுத்திக் கொள்ளவும் உதவியது.
கிருஷ்ணன்
எப்பவும் உங்களுடன் இருக்கட்டும். அப்போதுதான் என்னால் அவனை உணர்ந்து கொண்டு
இருக்க முடியும்.
அன்புடன்
மாலா.