Sunday, December 28, 2014

யாதவர்கள் ஏன் பெண்வழிச்சமூகமாக இருந்தார்கள்?



தாய் வழி சமூகம் என்பதே இயல்பான ஒன்றாக இருக்க முடியும். பெரும்பாலான மிருகங்களில் பெண்களே தலைமை ஏற்கிறார்கள். ஏனென்றால் பெண்களிடம் தான் அடுத்த தலைமுறைக்கான கடமை இருக்கிறது. பெண்கள் தான் அடுத்த தலைமுறையை பயிற்றுவிக்கிறார்கள்.பிறகு அவை தனியாக வாழத் துவங்குகின்றன. குழுவாக வாழும் விலங்குகளில் யானைகளில் பெண் யானை தான் தலைமை தாங்கும். தேனீக்களிலும் அவ்வாறே. குரங்குகளில் வலுவானதே தலைமை தாங்குகிறது. அங்கிருந்து மனித இனத்தில் தாய் வழியும், தந்தை வழியும் வந்திருக்கலாம். 

இந்தியாவிலும் அரசாண்ட பரம்பரை ஆகும் முன்பு வரை பெரும்பாலான இனக்குழுக்கள் தாய் வழி சமூகமாகவே இருந்திருக்கின்றன. எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) தாய் வழி சமூக முறை என் இளமை வரையிலும் இருந்தது. 

இப்போது யாதவர்கள் விஷயத்துக்கு வருவோம். அவர்களின் பொருளாதாரம் பசுவைச் சார்ந்தே இருக்கிறது. ஆகையால் அவர்களின் தெய்வங்களும் பெண்ணாக இருந்ததில் வியப்பில்லை. அதன் தொடர்ச்சியாகவே அவர்கள் தாய் வழி சமூகமாக வாழ்கிறார்கள். தாய் வழி சமூகத்தில் மகனை விட மருமகன் ஒரு படி மேல். அதை வைத்தே குந்தி, கிருஷ்ணன் உறவை புரிந்து கொள்ள முடியும். ஆனால் கிருஷ்ணன் யாதவர்களை தந்தை வழி சமூகமாக மாற்ற நினைக்கிறான். நிலையான அரசு ஷத்ரிய வழியிலேயே அமைய இயலும் என்கிறான். 

மகாராஜன் அருணாச்சலம்