Saturday, December 20, 2014

மானுட உறவுகள்



அன்புள்ள ஜெயமோகன் சார்,வணக்கம்!
திருதராஷ்டிரனின் பரந்து விரிந்துபட்ட உள்ளமும், அறத்தின் பால் அவருக்கிருக்கும் பெருமதிப்பும் படிக்க படிக்க உள்ளம் பேருவகையில் நிறைந்தது. எனினும் காந்தாரியின் அற உணர்ச்சியின் மீது சந்தேகம் எழுந்த வண்ணமே இருந்தது. [பிரயாகை 58]

ஆனால்,விதுரருக்கும் -காந்தாரிக்குமான உரையாடலில் காந்தாரியின் தூய அக எழுச்சி மெய்சிலிர்க்க வைத்தது.ஒரு கட்டத்தில்,தன் அண்ணன் சகுனி, பாண்டவர்களை உயிருடன் அழித்தொழிக்கும் இழிசெயலுக்கு இணங்கி இருப்பார் என்பதை காந்தாரி த்துக்கொள்ளும்போது, அவரின் கையறு நிலை வெளிப்படுகிறது.அரக்குமாளிகை ரிந்தழிந்ததில் கணவர் -பிள்ளை யாருடைய பங்கு இருந்தாலும் அவர்களை குப்பையென புறந்தள்ளுவேன் என காந்தாரி பொங்கி எழுவது பேருவகை...!
கணவன் - மனைவிக்குள் சண்டை,கைகலப்பு முடிந்து ஓய்ந்ததும்அது ‘உறவில்’தான் முடியும் என்பது பல தரப்பில் இருந்து நான் கேட்டு அறிந்தது.விதுரர்-சுருதை இடையேயும் இந்த காட்சி வருவதும், தானும் யாதவ மன்னனின் மகள்,குந்தியும் யாதவ மன்னனின் மகள்என்பதில் சுருதைக்கு இருக்கும் தடுமாற்றம் பல இடங்களில் சீற்றமாகவும்,குத்தலாகவும் தெரிவதும் அதி நுட்பம்...! 
மகாபாரதம் புராணம் என்று யார் சொன்னது?அது நாளைய நடப்புகளின் நேற்றைய வரி வடிவம்.
அதை இன்று படித்துக்கொண்டிருக்கிறோம்..அவ்வளவுதான்.!!
எம்.எஸ்.ராஜேந்திரன் - திருவண்ணாமலை