Friday, December 19, 2014

வாளும் வைரமும்



ஜெ,
பீஷ்மர் வாளை எடுத்துப்பார்க்கிறார். விதுரர் வைரத்தை எடுத்துப்பார்க்கிறார். இரண்டையும் ஒரே மாதிரி சன்முகவேல் வரைந்திருந்தார்

இரண்டுக்கும் உள்ள உறவு அல்லது வேற்றுமை ஆச்சரியப்படுத்துகிறது. வாள் வெளிப்படையானது. அதன் ஒளியும் வெளிப்படையானது

வைரம் ரகசியமானது. அதை அவர் பெட்டிக்குள் வைத்திருக்கிறார் அவர் எடுத்துப்பார்ப்பது அவருக்கே தெரியாது

பிரயாகையின் முக்கியமான குறியீடு இது

மாதவன் கருணாகரன்