Tuesday, December 16, 2014

வெறும் அம்பு



ஜெ

மகாபாரதத்தில் துரோணரின் கதாபாத்திரம் சரியாக விளக்கப்படாதது. வெண்முரசில் அந்தக்கதாபாத்திரம் பல படிகளாக விரிந்து வருகிறது. இப்போது வாசிக்க ஆரம்பித்து ஒருவருடம்கூட ஆகவில்லை. ஆனால் துரோணரை சின்னப்பையனாகவே பார்த்திருக்கிறோம் என்பது பிரமிப்பினை அளிக்கிறது

1. தந்தையால் கைவிடப்பட்டு சமையற்காரரிடம் வளர்ந்த குழந்தை

2. தந்தையின் அன்புக்காக ஏங்கி புறக்கணிக்கப்ப்ட்டவர்

3 ஆசிரியரின் செல்ல மாணவன். பெரிய வில்லாளி

4 பிராமன அடையாளத்துக்காக ஏங்கியவர்

5 அந்த அடையாளத்தை அளித்தான் என்பதற்காகவே துருபதனுக்கு கல்வி கற்பித்தவர்

6 பரசுராமரிடம் போய் பிராமணப்பதவியை யாசித்தவர்

7 கிருபியிடம் தன்னை அவமதிக்கக்கூடாது என்று மன்றாடியவர்

8 எளிமையான பிராமண வாழ்க்கையை வாழ முயன்று அவமானப்பட்டவர்

9 துருபதனால் அவமானப்படுத்தப்பட்டவர்

10 மனம் குமுறியபடி பீஷ்மரிடம் வந்தபோது அவரால் கௌரவப்படுத்தப்பட்டு மனம் நெகிழ்ந்தவர்

11 மகத்தான ஆசிரியர்

12 அர்ஜுனனை விட ஒரு படி மேலாக தன் மகனை வைத்தவர்

13 அர்ஜுனனுக்காக கர்ணனை துரத்தியதை ஒப்புக்கொண்டவர்’

14 அர்ஜுனனுக்காக ஏகலைவன் விரலை வாங்கியவர்

15 துருபதனை பழிவாங்கியவர். அதில் பெருந்தன்மை இல்லாமல் நடந்துகொண்டவர்

16 அந்தக்குற்றவுணர்ச்சியால் வாடுபவர்

17 மகன் அரசன் ஆனதில் மகிழ்ச்சி அடைந்தவர்

18 அர்ஜுனன் செத்தான் என்று தெரிந்ததும் இப்போதிருக்கும் ஆட்சியாளர்களிடம் ஒட்டிக்கொள்ள முயல்பவர்

19 மகன் சக்கரவர்த்தியாக ஆகவேண்டும் என கனவு கான்பவர்

-- எல்லா சித்திரங்களும் இணைந்து ஒரு முழுமையான மனிதனை கண்முன் காட்டுகின்றன

சண்முகம்