Monday, December 22, 2014

பேரன்னை



ஜெமோ சார்,

நான் கொஞ்சம் தாமதமாகத்தான் பிரயாகை படித்துக்கொண்டிருக்கிறேன். இன்றுதான் காந்தாரி வரும் அத்தியாயங்களை வாசித்தேன். மெய்சிலிர்த்தேன் என்று சொல்லலாம். பலவகையிலும் முக்கியமான பகுதி அது.

காந்தாரியை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். அவளை கெட்டவள் என்றே நாம் படித்துவருகிறோம். கந்தாரி மூளியலங்காரி என்றெல்லாம் சொல்லிக்கெட்டிருக்கிறோம். காந்தாரி என்றால் அம்மா. அவளுக்கு இருப்பது ஒரு உதாரணமான அம்மாவின் மனம். அம்மா என்னென்ன செய்கிறாளோ எல்லாம் அவளும் செய்கிறாள். தன் பிள்ளையின் தப்புகளை கண்டும் காணாமலும் இருக்கிறாள். பிள்ளை வாழவேண்டும் என்பதைத்தவிர ஒன்றுமே தெரியாமல் இருக்கிறாள்

அதோடு பிள்ளையைப் பெற்றதுமே அவளுக்கு வேறு உலகமே இல்லாமலாகிவிடுகிறது. திருமணமானதுமே அவள்  கண்களை கட்டிக்கொள்வதும் அதேபோன்றதுதான். பெரும்பாலான அம்மாக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்

ஆனால் அன்னைக்கு என்று ஒரு அறம் உண்டு. என்னதான் இருந்தாலும் அந்த அறம் அவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். அந்த அறவுணர்ச்சியும் கண்மூடித்தனமானதுதான். அதை காந்தாரியிலே பார்க்கும்போது மெய்சிலிர்த்தது

சாரநாதன்