Tuesday, December 16, 2014

நெருப்பு வாழும் இடம்



இனிய ஜெயம்,

விதுரருக்கும் சுசரிதனுக்குமான[நாவலுக்குள் வரும்]  முதல் உரையாடலே  அவர்களுக்கிடையேயான முரணில் துவங்குகிறது. அந்த முரணையும் விதுரரின் அகம் தத்துவமாக ஆக்கி உள்ளுக்குள் அடுக்கிக் கொள்வது அவரது பலமும் பலவீனமும் அதுவே.

கிருஷ்ணன் நோக்கிய  சுருதையின் சாய்வு  விதுரரை எந்த அளவு கொதிக்கவைக்கும்.  தன் மகனுக்காக சுருதை சீரும் போது  விதுரர் தளர்வது  அவளுக்குள் இருந்து பொங்கும் ஷாத்ர குணம் கண்டுதானே. அக் குணம் கொண்டவள் அவள் என விதுரர் உள்ளுக்குள் அறிந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் அவளை  எப்போதும்  சமையல் அறை எல்லைகளுக்குள் ஒடுக்கியே பேசுகிறார்.

மனைவி மகன் என அனைவரும்  தங்களை யாதவர்களுடன் இணைத்துப் பார்க்கையில், விதுரர் தனிமை கொண்டு உப்பரிகையில் நின்று  தன் தனிமையை  தன் தாய், மற்றும் சம்படயுடன்  இணைத்துப் பார்ப்பது, அவரை அவரது அனைத்து மதி யூக  வல்லமைகளும் ,தத்துவங்களும் கைவிடும் தருணம். 

கடலூர் சீனு