Friday, December 26, 2014

பசுமையின் உலகு



இனிய ஜெயம்,

இடும்ப வனத்தார்   கடோத்கஜன் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை  என்கிறார்கள். ஆனால் அவன் தந்தை வசம் அவன் பேசித் தீர்க்கிறான்.  அது போலவே கிளை தாவும் வித்தையும்.  கடோத்கஜனின்  கால்களைக் கொண்டு அவன் கிளை தாவ  லாயக்கற்றவன் என  இடும்பர்கள் கணிக்கின்றனர் . ஆனால்  அவர்களது  கணிப்பும் பொய்க்கிறது.

கடோத்கஜன் குறித்த  அறிமுகமே  அவன்  காட்டாளன் அல்ல  மனிதனும் அல்ல  என்று முன்னோர்களின்  சொல் வழியே  அவனை அடையாளச் சிக்கல்  கொண்ட ஒருவனாகத்தான்  இடும்பர் குலம் கணிக்கிறது.

ஆனால் பீஷ்மர் நீந்திக் கடந்து  தன்னை  கங்கை மைந்தன் என நிரூபித்தது போல, கடோத்கஜனும்  நிரூபித்து விட்டான்.  இடும்பர் குலம் கண்ட  தலைமைகளிலேயே  முதன்மையானவனாக இருக்கப் போகிறான்.

சிறு வயதில் அமர் சித்திரக் கதை வரிசையில் இந்த பால ஹனுமானின்  கதையை சித்திரங்களாக கண்டு வாசித்தது இப்போது நினைவில் புகை போல எழுகிறது.

கதையின் முடிவில்  கடோத்கஜன்  கிளைகளில் நீந்துவது  கண்டு பீமன் போலவே மிகுந்த பரவசம் அடைந்தேன். ஆம் அவன் புல்வெளியில் உழலப் பிறந்தவன் அல்ல.

திருதுராஷ்றருடன் நேரடி குருதிக் கண்ணி  தொடர்பு இல்லாவிடினும் , கடோத்கஜன்  தலையில்  தட்டிக்கொள்ளும்  நடத்தையும், அது கண்டு பீமனின் அடையும் உவகையும் இனிய தருணம். 

கடலூர் சீனு