Thursday, December 25, 2014

காவியச்சுவை



வெண்முரசில் நாம் ருசிக்க வேண்டிய முக்கியமானதொரு சுவை காவியச் சுவை. பீஷ்மரின் உயரம் குறித்த இரு வர்ணனைகளை திரு. ராமராஜன் மாணிக்கவேல் அவரது கடிதத்தில் சுட்டியிருந்தார்.
முதற்கனலில் சத்தியவதியைச் சந்திக்கச் செல்லும் பீஷ்மரை ஜெ, அவரது உயரத்தின் காரணமாக குனிந்து செல்வதாக எழுதியிருந்தார். இப்போது பிரயாகையில் அவர் நடந்து செல்கையில் அவரது நிமிர்வு உத்தரங்களைத் தொட்டுச் சென்றதாக எழுதுகிறார்.
முதற்கனலில் சத்தியவதியின் முன் குனிந்து நின்றவர் நம் பிதாமகர். ஆனால் இப்போதோ அனுபவத்தின் காரணமாக அனைவரிலும் நிமிர்ந்து நிற்கிறார். அதை மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்கிறார் ஜெ. மிகச் சாதாரணமாக அவ்வரிகளை நானும் கடந்து விட்டேன். யாராவது சொல்ல வேண்டியிருக்கிறது. இதே போன்று நண்பர்கள் ரசித்த, ருசித்த பகுதிகளையும் பகிர்ந்து கொள்ளலாமே!!!
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்