Monday, December 22, 2014

பாலையின் அன்னை



ஜெ

காந்தாரியின் கதாபாத்திரத்தை இதுவரைக்கும் அதிகமாக எவரும் விரிவாக எழுதியதில்லை என்று நினைக்கிரேன். கதாபாத்திரத்தை நீங்கள் சிறிய குணமாறுதல்கள் வழியாக வளர்த்துக்கொண்டு வந்தீர்கள். பெருந்தன்மை கொண்ட அரசியாக வருகிறாள். அதைவிட தம்பிமேல் அன்பு கொண்ட அக்காவாக வருகிறாள். பிறகு அன்பான மனைவி. அதன்பின் கண்மூடித்தனமான அன்புள்ள அம்மா

இந்த வளர்ச்சியில் அவளுடைய ஒரு பண்பு நலன் மாறாமல் இருக்கிறது. அவளை பாலைவன அம்மா என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. சகுனியிடம் இருக்கும் அந்த aggressiveness of the desert தான் இவளிடமும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். இவளும் அதே வேகத்துடன் இருக்கிறாள். காந்தாரி தடித்த அன்னையாக கண்முன் வந்துவிட்டாள். பாலைவனத்தின் அன்னை கொற்றவை என்பதும் ஞாபகம் வருகிறது

தொடக்கத்திலேயே கட்டற்று முலைப்பால் ஊறக்கூடியவளாக அவளைக் காட்டிவிட்டீர்கள். அந்த metaphor சரியாக நினைவில் இருந்துகொண்டே இருக்கிறது.


ராஜாராம்