Monday, December 22, 2014

கதாநாயகர்களில் முதல்வன்



ஜெ

இதுவரையில் பார்த்தால் வெண்முரசில் பீமன் தான் பெரிய கதாபாத்திரமாக இருக்கிறான். அதாவது  ஹீரோ. பீமனைத்தான் நிறைய வர்ணிக்கிறீர்கள். அல்லது மகாபாரதத்திலும் அப்படித்தானோ? தெரியவில்லை. [

ஆச்சரியப்படவேண்டிய விஷயம். விதவிதமான ஹீரோக்களை உண்டுபண்ணிய வியாசர். ஒருவன் மல்யுத்த வீரன். அவனை ஒருசாராருக்கு பிடிக்கும். இன்னொருவன் வில்வீரன். அவனை இன்னொரு சாராருக்கு பிடிக்கும். ஒருவன் விளையாட்டுப்பிள்ளை. ஒருவன் டிராஜிக் ஹீரோ

எனக்கு ஏனோ சின்ன வயசு முதலே அர்ஜுனனை தான் பிடிக்கும். அவன் ‘வச்சகுறி தப்பாது’ என்று சின்னவயசு முதலே ஒரு நினைப்பு. பையனுக்குக் கூட அர்ஜுன் என்றுதான் பெயர் வைத்தேன். அர்ஜுனனின் வீரம் என்பது அவனுடைய கண்களிலும் மனசிலும் உள்ல கூர்மையில் உள்ளது. பீமன் ஒரு பழையகால ஹீரோ. அர்ஜுன் தன் இன்றைய ஹீரோ. இன்றைக்கு வந்தால் அவன் கிரிக்கெட் ஆடமுடியும். வாலிபால் ஆடமுடியும். புட்பால் ஆடமுடியும் இல்லையா?

அரவிந்தன்