Monday, December 22, 2014

கருடனும் நாகமும் கனவும்



ஜெ,

மகாபாரதத்தின் தொடக்கத்திலேயே கருடனும் நாகங்களும் வந்துவிடுகின்றன. சின்ன வயதிலே அந்தக்கதைகளை எல்லாம் கேட்டு கண்கள் விரிந்து சொப்பனம் கண்டு அமர்ந்திருந்ததெல்லாம் ஞாபகம் வருகிறது

பிறகு ராபர்ட்டோ கலாசோவின் கா நாவலில் அதை வாசித்தபோது சப்பென்று இருந்தது. ஏனென்றால் பெரியவர்களின் காட்சியில் அதெல்லாம் சாதாரணமான குறியீட்டுக்கதைகள் தான். அவர் அப்படித்தான் சொல்லியிருந்தார். கொஞ்சம் நக்கலாகச் சொன்னார் என்பது ஞாபகம்

இப்போது நீங்கள் அந்தக்கதையைச் சொல்லும்போது மீண்டும் அந்தப்பரவசம் வந்தது. அது ஏன் என்று யோசித்துப்பார்த்தேன். ஏன் என்றால் அதை நீங்களும் குழந்தைக்கதையாகவே சொல்கிறீர்கள்

மிகப்பெரிய பாம்புகள் மிகப்பெரிய கருடன் எல்லாம் கனவு மாதிரி வந்தது. எத்தனை காலமானாலும் அதிலே உள்ள குழந்தைத்தனமான மூர்க்கம் குறைவதில்லை. அதை ஒரு பழங்குடி டிரைப் தான் கற்பனைசெய்துவிட முடியும்.

அதை காட்டின் பின்பகைப்புலத்தில் ஒரு அம்மா தன் பிள்ளைகளுக்குச் சொல்வதுபோலச் சொன்னதனால்தான அந்த சார்ம் குறையாமல் இருந்தது

நன்றி


விஜயகுமார்