Sunday, December 21, 2014

கேம்பல்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம் 

தங்கள் கட்டுரை மூலம் Joseph Campbell பற்றி தெரிந்து கொண்டு மேலும் அவரைப் பற்றி இணையத்தில் படித்தேன் - ஒரு புதியதிறப்பை அளித்தது.நமது தொன்மங்களின் கதைகளின் சாரம்  நம் தினப்படி வாழ்வோடு எப்படி பின்னி பிணைந்துள்ளது என எண்ணும் போது வியப்பு மேலிடுகிறது - இவர் போல பல ஆளுமைகளைப் பற்றிய அறிமுகம்  தங்களை தினம் படிப்பது மூலம் கிடைக்கிறது. 

மிக்க நன்றி.
மணிகண்டன் 

அன்புள்ள மணிகண்டன்

ஜோசப் கேம்பல் தொன்மங்களுக்கிடையே உள்ள உலகளாவிய ஒற்றுமையை விரிவாக ஆரார்ய்தவர். தொன்மங்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள உறவை புரிந்துகொள்ள மிக உதவியான சிந்தனைகள் அவருடையவை. வெண்முரசை புரிந்துகொள்ள முதன்மையாக உதவக்கூடிய ஆய்வாளர் என்றால் அவர்தான்

ஜெ