Monday, December 15, 2014

பெண்களின் இடம்



ஜெ

இடும்பர்களின் கதையில் என்னைக் கவர்ந்தது அதில் பெண்களுக்கு இருக்கும் இடம்தான். இடும்பி சுதந்திரமானவளாக இருக்கிராள். பாலியல் சுதந்திரம் இருக்கிறது. சடங்குகளிலும் சுதந்திரமான இடம் இருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் வேட்டைச்சமூகம் ஆனதனால் அவர்களில் ஆண் தான் அதிகாரம் உள்ளவனாக இருக்கிறான். ஆனாலும் பென்கள் வலிமையாக இருக்கிறார்கள்.

அவளை குந்தி ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் குந்தியும் கொஞ்சம் சுதந்திரமானவள் என்பதுதான். யாதவர்களில் பெண்களுக்கு சற்று அதிக அதிகாரம் இருக்கிறது. ஆனால் காந்தரிக்கு எந்த இடமும் இல்லை. அந்தப்புரத்திலே கிடந்து கொந்தளிப்பதைத் தவிர ஒன்றுமே செய்யமுடியவில்லை

நாகரீகம் வளரவளர பெண்களுக்கு இடமே இல்லாமல் ஆகிறது என்ற எண்ணத்தை இந்தப்புனைவில் காணமுடிகிறது

சிவராஜ்