வில்லிப்புத்தூராரின் 'வில்லிபாரதம்' பக்தியை மையமாகக் கொண்ட கவிதை ஊற்று. ராஜாஜியின் 'வியாசர் விருந்தோ' குழந்தைகளையும் கவரும் விதத்தில் மிக எளிமையாக எழுதப்பட்ட ஒன்று. இந்த மாதிரி தமிழில் மகாபாரதம் அறிமுகமான களத்தைத் தாண்டி ஜெயமோகனின் வெண்முரசு வேறு வேறு எல்லைகளைப் பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பு கூடுகிறது. இந்திய தத்துவ ஞான மரபில் மிகுந்த பரிச்சயம் கொண்டவர் ஜெமோ. இதுவே தனிச் சிறப்பாக ஜெயமோகனை மற்றவர்களிடமிருந்து பிரித்த தனி அடையாளமாகத் திகழ்கிறது.
அறிமுகக்குறிப்பு ஜிவி