Sunday, December 14, 2014

மகாபாரதத்தில் சிரிப்பு



அன்புள்ள ஜெ

பிராயகையில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கையில்.. கடலூர் சீனு ஆழமாகவும் மென்மையாகவும் வாசிப்பனுபவம் வரைகிறார். ராமராஜன் மாணிக்கவேல் பெரியாதாக அனுபவிக்கிறார்.  அவ்வப்போது பல வாசகர்களின் மென் வரைவுகள். தினமும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இனிமையாக – நான் சொல்வதெல்லாம் வெறும் புகழ்ச்சி போன்றே தோன்றுவதால், எழுதுவதற்கு ஒரு கூச்சம் வந்து விடுகிறது. இருப்பினும், ஒன்றை பற்றிய மதிப்பு குறைந்து விடக் கூடாது என்று எண்ணி எழுதுகிறேன்.

சற்று வேறு தளம் – 80 களில் ‘ஜானே பி தோ யாரோன்’ என்கிற ஹிந்தி படம். நசுருதீன் ஷா, ரவி பாஸ்வானி நடித்த குந்தன் ஷா படம். அதில் இறந்த பிணம் ஒன்று கடத்தப் பட்டு திரௌபதியாக – மகாபாரத காட்சியினுள் நுழைகிறது. மெதுவாக திரையின் கதாநாயக, வில்லன்கள் மகாபாரத நாடகத்தில் நுழைவது – எளிமையான ஆனால் மிகவும் நகைச்சுவை மிளிரும் காட்சிகள்.

(நசுருதீன் ஷா) துரியோதனன் – திரௌபதி துகில் உரியப் படக் கூடாது – அவள் சக்தி வடிவம் என துச்சாதனனை தடுப்பான். உறங்கிக் கொண்டிருக்கும் பீமனை தருமன் தட்டி எழுப்பி வசனம் கூற முடுக்குவான். பீமனை கடத்தி, உள்ளே பீமனாக வரும் ஓம் புரி கூலிங் கிளாசுடன் நுழைவார் – வெற்று மார்பு, கதையுடன். அதிகம் பேசும் அர்ஜுனனின் வில்லை முறித்து விடுவார். 20 ரூபாய் வில்லை முறித்து விட்டாயே – என அர்ஜுனன் வருத்தப் படுவான். கடைசியில் – அக்பர் சக்கரவர்த்தியாக (பங்கஜ் கபூர்) வந்து, திரௌபதியை எடுத்துச் செல்வார். அவ்வப்போது – திருதராஷ்டிரர் – ‘எ சப் கியா ஹோராஹா ஹை (இங்கு என்ன நடக்கிறது)’ என்று கேட்டு அமர்ந்து விடுவார். (சூரணன் – தருமனை பார்த்து – விசித்திரமான மனிதன் – என்பதை போல)

நசுருதீன் ஷா எவ்வளவு சிறந்த நடிகர் என்பதை சிறு அசைவுகளில் காணலாம் 

வெடித்து சிரிக்கலாம்.

அருகிலிருந்த நண்பர்களை அடித்தும் உரத்தும்  – சிரித்து மகிழ்ந்த காட்சி – இப்போது கூட மனம் விட்டு சிரித்தேன்.

வேறொரு தளத்தில் காடும், காட்டு சூழ் நிலை – மற்றும் மனிதர்களை பற்றி – ஒரு ஆழமான – உளவியல் ரீதியாக ஒரு புரிதல் – மனிதர்கள் ஊன் உண்ணுவதை காரண – காரியாமாக அணுகாமல் – அவர்தம் இயல்பாகவும் – காடு எவ்வாறு உண்டு சமன் படுத்துகிறதோ – அவ்வாறே – காட்டின் அதிர்வுடன் ஒருங்கிணைந்த – சூழல்.

நகரமோ --- அது வேறு ஒரு கதை - அல்லவா!!!

மிகுந்த அன்புடன் 

https://www.youtube.com/watch?v=SDClKXKn0l8

முரளி 


அன்புள்ள முரளி,

மகாபாரதத்தின் தொன்மையானக் கலைவடிவில் எப்போதும் சிரிப்பு உள்ளது. ஹனுமானும் பீமனும் குழந்தைகளைச் சிரிக்கவைப்பதற்காகவே காவியஞானிகளால் உருவாக்கப்பட்டவை என்று என்.வி.கிருஷ்ணவாரியர் ஒருமுறை எழுதியிருந்தார்

கதகளியில் எப்போதும் கொண்டாட்டமான பகுதி கீசகவதம்

ஜெ