இனிய ஜெயம்,
இன்று பீஷணர் அரண்மனைக்குள் நுழைவது [ பிரயாகை 54] ஏனோ மிகுந்த ஆசுவாசம் அளித்தது. பீஷ்மரின் இன்றைய ஆளுமை நோக்குகையில் முற்றிலும் புதிதாக இருக்கிறது.
அரசர் சொல்லிழந்த கணம் , பீஷ்மர் பேசத் துவங்குகிறார். சகுனியின் கால்களை பீஷ்மர் ஆராயும் பாசமும் , அவர் கணிகனை விலக்கி வைக்கும் விவேகமும், பீஷ்மர் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் உருவாகி வருகிறார்.
திருதுராஷ்ற்றரரரை தேறுதல் செய்யும் கணம் முதல், அரக்கு மாளிகைக்கு தடயம் தேடி செல்லும் கணம் வரை பீஷ்மர் வசம் எத்தனை இறுக்கம். பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என அறிந்தவுடன் அவரது நெகிழ்வு. ''என்ன என் மைந்தர்கள் உயிருடன் இருக்கிறார்களா?'' என் உவகையில் கூவுகிறார்.
திருதாவும், பீஷ்மரும் தந்தைமை துயர் எனும் ஒரு துயரத்தின் இரு முகங்கள்.
கடலூர் சீனு