Sunday, December 21, 2014

வாழும் நிலம்



ஜெ

வெண்முரசின் அழகு என்று நான் நினைப்பதே அதன் நிலக்காட்சிகள்தான். பாலைவனா வர்ணனையில்தான் நீங்கள் உச்சத்தை அடைந்தீர்கள் என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது காட்டின் சித்திரமும் அற்புதமாக இருக்கிறது. 

காடு அல்லது பாலைவனத்தின் முழு detail ஐயும் நீங்கள் அளிப்பதில்லை. நீங்கள் அளிப்பது ஒரு சில சிறு தகவல்களை மட்டும்தான். அது கூடி ஒரு பெரிய சித்திரமாக ஆகிவிடுகிறது. உதாரனமாக ஒரு பெரிய ஆலமரம் கையில் விளையாட்டுப்பொம்மை போல ஒரு கோயிலை வைத்திருப்பது. ஓடிச்செல்லும்பாம்பும் காலடி ஓசை கேட்டதும் சட்டென்று வளைவது. உடலை ஒடுக்கியபடி நரி காட்டுக்குள் ஓடுவது. குதிரைகள் மேலும்போது அடிக்கடி வாயால் விலாவை வீசி நக்கிக்கொள்வது

இந்தக்காட்சிகள் தரக்கூடிய evocation வழியாகவே முழுமையாக அந்த இடத்தில் வாழ்ந்த அனுபவத்தை அளிக்க முடிகிறது உங்களுடைய எழுத்தால். . 

முன்பு மழைப்பாடலில் ஒரு contrast அந்த அழகை உண்டுபண்ண்யது. பாலைவனம் முடிந்ததுமே மழையும் புல்வெளியும் வந்துவிட்டது. இப்போது என்ன அபடி இருக்கிறது என்று பார்த்தேன். இப்போது ஒருபக்கம் அரண்மனைச் சதிகள் மறுபக்கம் பேரழகான காடு. அதன் innocence மறுபக்கம். இரண்டும் மாறி மாறி அத்தங்களை அளிக்கின்றன

சாரதி