Thursday, December 25, 2014

நாகபாசன்



இனிய ஜெயம்,

பாண்டவர்கள் இறக்கவில்லை  என்பதை உணர்ந்து துரியன் அடையும் புத்துணர்ச்சி முக்கியமான இடம். அவனும் கிடத்தட்ட ஏழு வருடம் குண்டாசி போல தான் இருந்திருக்கிறான்.  துரியன் மீள ஒரே காரணம்  அவனது ஆல்டர் ஈகோ ஆன பீமன்.  ஆம் பீமன் இருக்கும் வரை  துரியனும் இருப்பான்.

ஆனால் குண்டாசிக்கு இருந்ததோ,பாண்டவர் மீதும் துரியன் மீதும்  தீராத பிரேமை. வெறுப்பின் சிறு துளியும் இல்லாத பிரேமை.  தன் மேல் பொழிந்த அன்பெனும் அமுதம் அனைத்தையும் உண்டு நஞ்செனக் கக்கும்  மானுட அகத்தின் விசித்திரத்தின் முன், நிகழ்ந்த சதியில் தனது மௌனம் கண்டு, சித்தம் பேதலித்து விட்டான்.  இத்தனை குடித்து மதி அழிந்தும் இன்னும் அவன் சதி குறித்து 'உளறவில்லை.' குண்டாசிக்கு  மீட்பே இல்லை.

ஒரு சுயம்வரம் பின்னுள்ள அரசியல் காய் நகர்த்தல்கள் இன்றைய அத்யாத்தை இரு முறை வாசித்த பின்னும் தலை சுற்ற வைக்கிறது.

ஆச்சர்யம்  கர்ணன் கணிகனின் வார்த்தைகளை பின் தொடர்கிறான். துரியன் மீதான கணிகனின் கச்சிதமான பிடி இது. இனி துரியன் தப்ப இயலாது.

கடலூர் சீனு