Sunday, December 14, 2014

இடும்பன்



ஜெ,

பெரிய நிறங்களேதும் இல்லாமலிருந்தாலும் இடும்பனின் குணச்சித்திரம் மிகவும் பிடித்திருந்தது. மூர்க்கனோ அரக்கனோ இல்லை. அவன் ஒரு அரசன். அவனுக்கு தெரிந்திருக்கிறது, ’நாகரீக’ மக்களை உள்ளே விட்டால் என்ன நடக்கும் என்று. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு தன்னையும் தன் மக்களையும் காப்பதில் தெளிவாக இருக்கிறான்.

அதோடு அவர்களின் டிரைபுக்கே உரிய ஒரு வகையான உறுதியுடன் இருக்கிறான். அவன் போரிட்டு சாகும் இடத்தில் உண்மையாகவே வருத்தம் வந்தது. அந்த பெரிய கற்களில் ஒன்றாக அவன் ஆவான். தங்கள் மூதாதையருடன் சேர்ந்து தங்கள் மண்ணைப்பார்த்துக்கொண்டு நிற்பான் என்றபோது மனம் நிறைந்தது

அற்புதமான மனிதன்

சாமிநாதன்