ஜெ
வெண்முரசின் பிற நூல்களைப்போல இல்லாமல் பிரயாகை நிறம் மாறிக்கொண்டே செல்கிறது. துருபதன் அத்தியாயத்தில் போர் , உச்சகட்ட உணர்ச்சிகள். அதன்பின்னர் ராஜதந்திர நுட்பங்கள். அரசியல். அதன்பிறகு கதாபாத்திரங்களின் ஆழமான உணர்ச்சிகள் வந்தன.
இப்போது கிருஷ்ணனின் படையெடுப்பு வரும்போது கதை வேறு மாதிரி செல்கிறது. சரசரவென்று. சிலசமயம் அலக்ஸாண்டர் டூமாஸ் நாவல் வாசித்த உணர்வு. அன்றைய போரின் நுட்பங்கள்
கிருஷ்ணன் கதாபாத்திரம் வந்து அனைத்தையும் கையில் எடுத்துக்கொள்வதை மிக விரும்பினேன்
குறிப்பாக போரின் முன்னால் வரும் தூக்கம் பற்றிய அந்த குறிப்பு அழகானது. நானே பல ஆழமான கிரைஸிஸ் களில் அப்படி தூங்கியிருக்கிறேன். விமானநிலையத்தில் வரும் தூக்கம் இருக்கிறதே அதற்கு சமானமான இன்பம் வேறு இல்லை
சரவணன்