Tuesday, December 2, 2014

ஆணவம் என்ற ஆளுமை


[துரியோதனந் கம்போடிய சிலை]

அன்புள்ள ஜெமோ

வெண்முரசு மேலும் மேலும் மகாபாரதக் கதைபாத்திரங்களை சிக்கலாக ஆக்கிக்கொண்டே போகிறது. ஆனால் மிகவும் நம்பகமாகவும் இருக்கிறது. இந்த ஆச்சரியத்தைத்தான் கவனிக்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்தால் அவை பரிணாமம் அடைவது ஆச்சரியமாக இருக்கிறது. சிறந்த உதாரணம் துரியோதனன்

துரியோதனன் பீமனிடம் நட்புடன் தோள்தழுவி இருக்கிறான்

அதன்பிறகு ஈகோ தூண்டப்பட்டு எதிரி ஆகிறான். அது  பீஷ்மர் அவனை பொருட்படுத்தாத இடத்தில் ஆரம்பிக்கிறது.  கதாயுதப்போரில் காயம்படும்போது கூடுகிறது. கரடியிடமிருந்து காப்பார்றப்படும்போது உச்சகட்டம்

அவன் தூணகர்ணன் என்ற தெய்வத்திடம் போய் தன்னை பெண்மை அம்சமே இல்லாதவனாக ஆக்கிக்கொள்கிறான்.

அவனுடைய தோளில் ராகு கேது என்ற சர்ப்பங்கள் குடியேறுகின்றன. அவை வஞ்சத்துடன் இருக்கின்றன

கார்க்கோடகன் வந்து அவன் வஞ்சத்தை தூண்டி அவனை எழுப்புகிறான்

கர்ணனை தன் தோள் தோழனாக ஏற்றுக்கொள்கிறான்

அவன் அரசனாக வேண்டும். அவன் தந்தை செய்த முடிவால் அரசன் ஆகமுடியவில்லை. பாண்டவர்களை அரசனாக அவனே அறிவிக்கிறான்.

அவன் பலராமனுக்கு அளித்த வாக்குறுதி மீறப்படும்போது மனக்கசப்படைகிரான்

அந்தக்கசப்பு அவனை பொம்மை மாதிரி பயன்படுத்தும்போது கூடுகிறது

வஞ்சமும் கோபமும் கொண்ட அரக்கமனம் பெறுகிறான்.

இந்த பரிணாமத்தில் இருக்கும் கன்சிஸ்டன்ஸி அற்புதமாக இருக்கிறது. அவனுடைய பலம் இரும்பு மாதிரியான ஈகோ. அதுவே அவனை பெருந்தன்மையானவனாகவும் ஆக்குகிறது. அவமதிப்பை பெரிய அளவில் அடையவைக்கிறது. கொடூரமானவனாகவும் ஆக்குகிறது

ஈகோ கொண்டவர்களைப்போல கொடுமையானவர்களும் அன்பானவர்களும் இருக்கமாட்டார்கள் . துரியோதன்னை பக்கத்துவிட்டு மனிதனைப்போல பார்க்கமுடிகிறது

சிவம்