Tuesday, December 2, 2014

குரோதம் விளைதல்



ஜெ,

அரக்குமாளிகை அத்தியாயங்கள்  இத்தனை வேகமாக வருமென்று நினைக்கவேயில்லை. மகாபாரதம் சீக்கிரமே வந்துவிட்டதோ என்ற எண்ணம் வந்தது. இதற்குமேல் கதை எவ்வளவு நீட்சி அடையமுடியும் என்றே தெரியவில்லை.

அரக்குமாளிகைக்கு கொண்டுபோய் பாண்டவர்களை எரிக்க இவர்களெல்லாம் முயற்சி எடுப்பது மகாபாரதத்தில் சாதாரணமாகவே வருகிறது. நீங்கள் அதற்கு அளித்திருக்கும் அந்த பின்கதை மிக விரிவாகவும் தீவிரமாகவும் இருக்கிறது. அற்புதமானது. அது கௌரவர்களின் நியாயங்கள் என்னென்ன என்று அழகாகச் சொல்கிறது

சொல்லப்போனால் அது துர்யோதனன் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது. அவனும் விதியின் கைப்பாவை தான் என்று தோன்றுகிறது. மனிதர்களெல்லாம் மிகமிகச் சிறியவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது

குரோதம் நூறுமேனி விளையும் என்று நீங்களே எழுதியதை வாசித்த ஞாபகம்

சேதுராமன்