Friday, December 5, 2014

குருவைச் சந்திக்கும் கணம்




திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
முதல் சந்திப்பில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் பேசுவது :
அர்ஜுனன் உள்ளே சென்றபின் “நீ ங்கிருந்து வருகிறாய்?” என்றான்தென்கூர்ஜரத்தின் அரைப்பாலை நிலத்தில் என் குடிகள்  இருக்கின்றன” என்றான் கிருஷ்ணன். “உன் தமையன் உடனிருக்கிறாரோ?” ன்றான் அர்ஜுனன். “ஆம்…” என்று சொன்ன கிருஷ்ணன் “உன் வில்திறத்தை அறிந்திருக்கிறேன்அதை நம்பி வந்தேன்என்றான். “அது இனி உன் வில்” என்றான் அர்ஜுனன்.
[பகுதி எட்டு : மழைப்பறவை – 2
இப்படி சொன்ன அர்ஜுனனுக்கு இனி வரப்போகும் கீதா உபதேசமோ விஸ்வரூப தரிசனமோ எதற்கு
இந்த வரிகளை படிக்கும்போது உண்மையில் என் கண்களில் நீர் 
நிறைந்தது ஏன் ?  
உள்ளம் நெகிழ்ந்து அந்த பரமார்த்தாவின் கருணையை 
உணர்ந்ததாலா ?
மெய்மறக்கச் செய்த பரவச உணர்வு உங்கள் எழுத்து வலிமையின் பிரதிபலிப்போ?      அருமைமிகவும் அருமை
நன்றி.
பிசந்திரசேகரன்  

அன்புள்ள சந்திரசேகரன்

சில விஷயங்களை எண்ணி எழுதுவதில்லை. எழுதியபின் ஏன் அவை வந்தன என எண்ணுவதுண்டு

அப்படிப்பட்ட ஒருவரி அது. அது ஒரு சிந்தனையை காட்டவில்லை. கிருஷ்ணன் அர்ஜுனன் மேல் செலுத்திய முழுமையான செல்வாக்கை காட்டுகிறது

ஒரு குருவை சீடன் சந்திக்கும் கணம் அப்படிப்பட்டது என்பதே என் புரிதல். கீதை என்பது அதன்பின்னரும் வரும் மனச்சோர்வின், சஞ்சலத்தின் விளைவு

ஜெ