இனிய ஜெயம்,
இன்றைய அத்யாயமும், யூகப் பிழைகளின், மனக் கோணல்களின் விசித்திரத் தருணங்கள் நிறைந்த அத்யாயம்.
விதுரனின் மந்தனச் சொற்க்களை யூகித்து அறியும் குந்தியின் குயுக்தி, திருதுராஷ்ற்றர் சொல்லும் நேரடி சொற்க்களை பிழையாகப் புரிந்துகொள்வது என்ன சொல்ல விதி.
உணவைக் கண்டு புன்னகைக்கும், உண்டு முடித்து புன்னகைக்கும் திரியை மற்றும் அவளது மைந்தர்களுக்கு , அவர்கள் மயங்கும் வண்ணம் மது அளிப்பவன் பீமன்.
இனி சிருங்க பதத்தின் மலைக்குடிகளும் யாதவக் குலத்துக்கு எதிரி.
வாரண வதம் எனும் களமும், அதற்க்கான பின்புலமும், அக் குகையின் உள் உறுப்பு விவவரனைகளும் அந்த இயற்கையின் அமானுஷ்யம், தெஜோ மயம் எனும் செயற்கை அழகின் வர்னைனகளுடன் முரண் கொண்டு இன்னதென்று வகுத்து உரைக்க இயலா வாசிப்பு இன்பம் ஒன்றை அளிக்கிறது.
கடலூர் சீனு