Sunday, December 14, 2014

வண்ணக்கடல் அலைகள்



 "வண்ணக்கடல்" முடிவுற்றது, மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் வழியாக மெதுவாக முன்னகர்கிறது வண்ணகடல் , முதர்கனல் போல் வேகம் உண்டு , தத்துவம் உண்டு , யதார்த்தவாதம் உண்டு , இளநாகன் சென்றடையும் நிலங்கள் வழியாக நாம் மெதுவாக பாரதவர்ஷத்தின் தொன்நிலங்களில் பயணிக்கும் அனுபவத்தை அடைகிறோம்,அப்படியே மஹாபாரத நாயகர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து , மனதை கவர்கிறார்கள் ,அவர்களை நாம் வெறுக்கவும் செய்கிறோம், துரோணர் சிருமையடையும் பொழுது மனது விம்மதொடங்குகிறது, அதே துரோணர் ஏகலவ்யனின் கட்டைவிரலை கேட்கையில் துரோணர் எவ்வளவு மாறிவிட்டார் என்ற எண்ணம் வருகிறது , 


வாழ்க்கை எனும் பெரும்நாடக வெளியில் எப்படி சிறுமைகள் வஞ்சமாகி பெருமைகளை தேடுகின்றன, அண்டி பிழைத்து வாழ்பவன் அகப்பட்டுகொண்டமையால் தனக்கு இழைக்கப்பட்ட அதே அநீதிகளை அவன் முன் மற்றவனுக்கு இழைக்கப்படுகையில் மெளனமாக பொறுத்து அறத்தை புதைக்கிறான், காலத்தால் காய்கள் நகர்த்தப்படுகின்றன, இதில் எப்படி மனிதன் சிறைபிடிக்கப்பட்டு ஒருவர் மீது ஒருவர் வஞ்சம், பகை , வெறுப்பு , கிழமை அடைகிறார்கள் . யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்ற மனநிலையையே நாம் வந்தடைகிறோம் ,


 ஏதோ இறந்தகாலத்தில் செய்த வினைகளின் நகர்தலால் நடக்கும் நிகழ்காலமும் , மகாபாரத போர்முனை நோக்கி பாண்டவ-கௌரவ இளமைநாட்களிலேயே வஞ்சம் புகுந்து போர்நிகழ தொடங்கிவிடுகிறது,பிறகு நடப்பது வெறும் சேனை மோதல்கள் மட்டுமே என எண்ணவைக்கிறது.


சிறுவயது முதல் எப்போதுமே மலைகளை பார்த்தால் எனக்கு ஒன்று தோன்றும் , புராண கோபுரங்களை பார்த்தாலும் , தொன்மையான நகரங்களை பார்த்தாலும் இந்த மனவோட்டம் வரும் , "இங்கு என்னை போல் பல கோடி கால்கள் பதிந்திருக்கும் , அவர்கள் என்ன செய்தார்கள் , என்னை போல் பல கோடி கண்கள் இந்த காட்சியை கண்டிருக்கும் , அவர்களின் எண்ணவோட்டம் எப்படி இருந்திருக்கும் , அவர்கள் வாழ்க்கைமுறை , சஞ்சலங்கள் , தத்துவங்கள்  , மானுடம் , வாழ்கை தத்துவம் என்றே அது இட்டுச்செல்லும் , சிறுவயதில் குழம்பி பல முறை கற்பனை என்னை ஆட்கொண்டு மீளமுடியாமல் தூக்கத்திலேயே அந்த மனவோட்டம் முடியும், பிறகு வேறொரு நாளில் சிறகுகள் மீண்டும் முளைக்கும்.


அதுவே எனக்கு வரலாறு தொன்மம் போன்றவற்றில் ஆர்வத்தை தூண்டியது. இளநாகன் மதுரை வருகிறான் , பிறகு அப்படியே சோழ நாட்டிற்குள் உறையூர் வழியாக குடமுறுட்டி சிற்றாற்றை கடந்து ,காவிரியில் நீராடிகிறான் , மனம் ஒருகணம் நெகிழ்வடைகிறது, அங்குள்ள புராண கோவில்களுக்கு செல்கிறான் , பிறகு அப்படியே பல நிலங்களை கடக்கிறான் . பல பழங்குடிகள், பேரரசுகள் , கந்தக நிலங்கள் , கடலோர நகரங்கள், கோவில்கள் , அருவிகள் , சிறிய ஆறுகள் , பெரிய ஆறுகள் ,காடுகள் , மழை , மனித முகங்கள் என்று விரிந்தவண்ணம் பாரதம் எத்தனை வேறுபாடுகளை உள்ளடக்கி நிகழும்மிடமாக இருந்திருக்கிறது என்று அறிகிறோம் . எனக்கு பிடித்த வாசகங்கள் கீழே உள்ளன, இந்த நாவல் முழுவதும் அவை இருகின்றன,இருந்தாலும் என்னுடைய மனம் இப்படித்தான் வேலைசெய்கிறது , இதை நாவலோடு படிக்கையில் இன்னும் ஆழமாக பொருள்தரும், ஆனால் இப்படி பிய்த்துபோடுவதால் அது படிக்கும் ஆர்வம் உள்ளவர்களை இந்த நாவல் நோக்கி இட்டுச்செல்லும்,

இன்னொன்றும் உள்ளது இந்த வாசகங்கள் வாழ்கையின் அடிநாதங்களாக இருக்கும் சிலவற்றை உரசிச்செல்கிறது . எப்படி சமகால வாழ்க்கைக்கு மகாபாரதம் பொருந்தும் என்ற கேள்விகளுக்கு விடையாக அமையும் ஆதாரங்கள் இந்த வாசகங்கள்,மானுடர் மனதில் ஆழமாக ஓடிக்கொண்டுடிருக்கும் "unconscious" யை தொட்டுச்செல்கிறது. இந்த நாவலே அப்படித்தான் , ஒரு பயமும் வருகிறது இப்படி அசுர வேகத்தில் கிளை கதைகளை ஜெயமோகன் எழுதிக்கொண்டு போனால் , எதாவுது மிஞ்சுமா என்ற அச்சம் வருகிறது ,இந்த காலகட்டத்தின் சிந்தனைக்கு உகந்தவாறு மகாபாரதம் தொகுக்கப்படுகிறது என்றும் தோன்றுகிறது . நாம் இளநாகனுடன் கைகோர்த்துக்கொண்டால் வண்ணக்கடலில் எளிதாக நீஞ்சிவிடலாம் . 760 பக்கங்கள் இருந்தாலும் இரண்டு வாரத்தில் முடித்துவிடலாம் .

  1. கடலில் மீன்கள் போன்றவை இவ்வுலகத்து உண்மைகள் , முடிவற்றவை என்பதாலேயே அறிதளுக்குப்பாற்பட்டவை , தர்க்கம் என்பது நாம் வீசும் வலையில் விழும் மீன்கள் போல் .
  2. காதல் மாயை என்றறிந்தவனே காதலில் திளைக்க முடியும் , மாயையை அறிந்தவன் மாயையை அடிநுனி சுவைப்பவனாகிறான் .
  3. இறப்பே நிகழும்மென்றாலும் போர் ஒரு விளையாட்டு , ஏனெனில் வாழ்க்கை இன்னொரு விளையாட்டு, இப்புடவியோ பெருவிளையாட்டு .
  4. நான் பேசும் பேச்சு வீன்பேச்சென்றால் உன் அகம் ஏன் அமைதியிழக்கிறது , ? , நீ ஏன் என்னை அஞ்சி ஓடுகிறாய் ? , சரி உனக்கு உன்மீதுள்ள அச்சம் அது , தன்னை அஞ்சுபவனும் கோழையே .
  5. தானறிந்த உலகில் தானறியா ஆடலுக்கு மைந்தர்களை இறக்கிவிடுவதுதான் அனைத்துப்பெற்றோரும் செய்வது .
  6. முதன்மையான எதையோ சொல்லவந்து தயங்குபவன் போன்ற பாவனை , அது தன் கோழைத்தனத்தை மறைக்கவிரும்பும் கோழையின் அசைவு .
  7. வணிகருக்கென்ன! ஓங்கிச்சொல்லப்படும் எதுவும் அவர்களுக்கு கவிதையே .
  8. சிறுவர்களைப்போல் புத்துணர்ச்சியுடன் எவரும் புதியநாளை எதிர்கொள்வதில்லை
  9. நான் பிறந்ததும் உங்களை கைபிடித்ததும் எல்லாம் அவன் வருகைக்காகத்தான்.
  10. மாறாத வாழ்க்கை மெல்ல மெல்ல உள்ளத்தை அமைதியுரச்செய்கிறது.
  11. வேரும் விதையும் மண்ணில்தான் இருக்கும் , அந்த வாழ்க்கையில் இருந்துதான் மாமனிதர்கள் எழுந்து இந்த மலைக்குமேல் வந்துகொண்டு இருகிறார்கள்.
  12. நீயும்தான் வளர்ந்துவிட்டாய் உன்னில் இருந்து அந்த சிறுவன் இந்த ஒன்றரை வருடங்களில் மறைந்துவிட்டான், எப்பொழுது கல்விசாலையை விட்டு விலகினாயோ அப்போதே ஆண்மகனாக தொடங்கிவிட்டாய்.
  13. தங்களுக்கு படைக்கலம் என்றாலே என்னவென்று தெரியவில்லை மூத்தவரே, ஆகவேதான் அஞ்சுகிறீர்கள், தங்கள் நெஞ்சில் இருப்பது எந்த அறகுழப்பமும் அல்ல வெறும் அச்சம் மட்டும்தான் .
  14. ஏதோ நிகழவிருக்கிறது என்ற அச்சத்தின்மீதுதான் எளிய மக்கள் எப்போதும் அமர்ந்துதிரிக்கிறார்கள்.
  15. பெண்கள் காதலர்களை நினைப்பதே இல்லை , அவள் இந்நேரம் தன் மைந்தர்களை எண்ணிக்கொண்டிருப்பாள்.காதலை போல் களையும் தன்மை கொண்டது மேகங்கள் மட்டுமே .
  16. உன் மூதாதையரை ஆக்கிய முதற்பெரும் விசைகளே அவர்களை அழித்தன  . கட்டற்றுப் பொங்கியெழும் உயிராற்றலே அசுரம் எனப்படுகிறது , அவ்விசையே எல்லையற்ற விழைவாக , கட்டற்ற சினமாக , கருத்தற்ற எழுச்சியாக அவர்களில் நிகழ்ந்தது , அவற்றுக்கு நிகராக அவர்களை அழித்தது கரையற்ற அன்பும் , அளவற்ற கொடையும் , மதியற்ற கருணையும் என்று அறிக . படை மடத்தால் வீழ்ந்த அசுரர் சிலரே , கொடைமடத்தால் வீழ்ந்தவரோ பற்பலர் .
  17. நிகழ்வைவிட சொல் வல்லமை மிககதாஎன்ன ? ,ஆம் , நிகழ்வன வெறும் பருபொருட்களில் முடிந்துவிடுகின்றன, பொருளும் உணர்வும் சொல்லாலேயே ஏற்படுகின்றன .
  18. தேடுபவர்கள் கண்டடைந்துவிடுகிறார்கள் , ஏனென்றால் அவர்கள் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது . காட்டாற்று வெள்ளம் போல் வினா அவர்களை இட்டு செல்கிறது . சரிவுகளில் உருட்டி, அருவிகளில் வீழ்த்தி சமவெளியில் விரிந்து கொண்டு சேர்க்கிறது, பெரும்கடலை காணும்போது ஆறு தோன்றிய இடம் எது என அறிந்துகொள்கிறார்கள்.
  19. அவன் தானறிந்தவற்றை எல்லாம் அக்கணமே கழற்றிவிட்டுச் செல்பவனாக இருந்தான் , தான் தேடுவதைத்தவிர எதையும் தக்கவெய்க்காதவனாக இருந்தான் .
  20. எஞ்சுவது பொருளற்ற சுவடுகளே , சுவடுகள் சொல்லாகும் பொழுது காவியம் பிறக்கிறது .
  21. தன் அகம் நிறைக்கும் காதலரை மகளிர் மைந்தனில் மட்டுமே கண்டுகொள்ளமுடியும் அது அவன் .
  22. பெண்ணையும்  நீரையும் காற்றையும் கடைலையும் எவரும் உரிமைகொள்ளலாகாது என்று அன்னை சொன்னால்.
  23. காமக்ரோதமோக பெருவெளியை வாழ்த்துவோம்! , தெய்வங்கள் ஆடும் சதுரங்கக்களத்தை வாழ்த்துவோம் , மானுடரின் அழியாபெருங்கனவை வாழ்த்துவோம் .

மது லச்சின்