Friday, December 5, 2014

விரிந்து முடியாத மலர்




அன்புள்ள ஆசிரியருக்கு 

நமது கிருஷ்ணன் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கிருஷ்ணனின் பாத்திரம் மட்டுமே மாறாதது என்று சொல்லியிருந்தார். 

பிரயாகை - 40 கிருஷ்ணன் ஒற்றை மையத்தை ஆதரிக்கும் absolutist போலவே தோன்றுகிறான். தான் முழு அதிகாரம் செலுத்தும் அரசை அமைக்கப்போவதாக சொல்கிறான். "அரசனை மாற்றும் நிலை கொண்ட சமூகங்களை" அவன் ஒரு படி கீழே சொல்வதாகவே தோன்றுகிறது.

கீதை பன்மைமையத்தை சொல்வது, காந்தி ஜனநாயகத்தின் வேர்களை கீதையிலேயே (கீதையிலும்) கண்டுகொண்டார் என்பதே என் புரிதல். அதனால் பிரயாகை கிருஷ்ணனுக்கும் கீதைக்கும் அரசியல் நோக்கில் ஒரு இடைவெளி இருப்பதாக பட்டது. 

கிருஷ்ணன் என்ற குலத்தலைவன் ஞானியாக மலர்வான்  என்று சொல்லியிருந்தீர்கள். அதில் இந்த அரசியல் நோக்கின்  பரிணாமமும் புரியவரும்  என்று நினைக்கிறேன்

மது

அன்புள்ள மது

கிருஷ்ணன் மாறாதவர்தான்

ஆனால் அவர் இந்நாவலில் ஒருபோதும் அவரது பார்வையில் வரமாட்டான். பிறரது நோக்கில் அவர் இதழ்விரித்து மலர்ந்துகொண்டே இருப்பார்

கடைசிவரை முழுமையாகச் சொல்லிமுடிக்கப்படமாட்டார்

ஜெ