அன்புள்ள ஆசிரியருக்கு
நமது கிருஷ்ணன் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கிருஷ்ணனின் பாத்திரம் மட்டுமே மாறாதது என்று சொல்லியிருந்தார்.
பிரயாகை
- 40 கிருஷ்ணன் ஒற்றை மையத்தை ஆதரிக்கும் absolutist போலவே தோன்றுகிறான்.
தான் முழு அதிகாரம் செலுத்தும் அரசை அமைக்கப்போவதாக சொல்கிறான். "அரசனை
மாற்றும் நிலை கொண்ட சமூகங்களை" அவன் ஒரு படி கீழே சொல்வதாகவே தோன்றுகிறது.
கீதை
பன்மைமையத்தை சொல்வது, காந்தி ஜனநாயகத்தின் வேர்களை கீதையிலேயே
(கீதையிலும்) கண்டுகொண்டார் என்பதே என் புரிதல். அதனால் பிரயாகை
கிருஷ்ணனுக்கும் கீதைக்கும் அரசியல் நோக்கில் ஒரு இடைவெளி இருப்பதாக
பட்டது.
கிருஷ்ணன்
என்ற குலத்தலைவன் ஞானியாக மலர்வான் என்று சொல்லியிருந்தீர்கள். அதில்
இந்த அரசியல் நோக்கின் பரிணாமமும் புரியவரும் என்று நினைக்கிறேன்
அன்புள்ள மது
கிருஷ்ணன் ஒரு பெரிய புதிர். இன்றுவரையிலான இந்திய ஆன்மீக- வரலாற்று- மரபின் பெரிய புதிர் அவனே. ராமானுஜரும் மத்வரும் முதல் இன்றுவரை பலநூறு பேர் அதை விளக்கிவிட்டனர்/ இன்றும் பல்வேறு ஆய்வுகள் மேலைநாடுகளிலிருந்து வருகின்றன
கிருஷ்ணனைப்பற்றிய மிக எளிமையான ஓர் ஒற்றைப்படைப்புரிதல் எளிய பக்தர்களிடம் உள்ளது. எல்லாவற்றையும் ‘அவன் பகவான். எல்லாம் அவன் லீலை. நமக்கு புரியாது’ என்ற கோணத்தில் கடந்து செல்லமுடியும் அவர்களால்
வெண்முரசு அவர்களுக்குரியது அல்ல. இது அந்தப்புதிரை முழுமையாகவே எதிர்கொள்ளும் ஆக்கம். அந்த விரிவை பெரும் கற்பனையுடனும் வரலாற்றுணர்வுடனும் யதார்த்தபோதத்துடனும் அணுகும் வாசகர்களுக்கானது
ஆரம்பத்தில்யே அத்தனை விரிவான விளக்கத்துடன் தான் கிருஷ்ணன் அறிமுகமாகிறான். ஒருவனல்ல பலர் எனற வரியே அவனை புரிந்துகொள்வதற்கான சாவி. அனைவரும் ஒவ்வொருவராக வெளிவந்து நிறைவார்கள்
ஜெ