[துவராகையில் கிருஷ்ணன்]
ஜெ,
இன்று வெளியான துவாரகையின் உருவாக்க வரலாறு பிரமிப்பூட்டியது. துவாரகை என்றபெயர் தவிர எதுவுமே புராணங்களில் இல்லை. மகாபாரதத்திலே கிருஷ்ணன் பெரும்பாலும் துவாரகையில் இல்லை. துவாரகை என்ற சொல்லை வைத்தே அந்தக்கற்பனையை எழுப்பிவிட்டீர்கள். அதன் உருவாக்கம், தோற்றம் மட்டுமல்ல அப்படி இருப்பதற்கான சரித்திரக்காரணமும் தெரியவருகிறது
‘பெருவாயில்புரம்’ என்ற வார்த்தையை வாசித்தபோதுதான் கொற்றவை ஞாபகம் வந்தது. அதிலே கபாடபுரம் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கும். வடக்கே நீலமணிவண்ணனாகிய ‘ஒரு மன்னன்’ கட்டிய நகரைப்பற்றிக் கேள்விப்பட்டு அதேபோல அமைக்கப்பட்டது கபாடபுரம் , அதற்கு கடலை நோக்கிய பெரிய வாசல் இருந்தது என்று சொல்லியிருப்பீர்கள். அந்த நுட்பமான தொடர்ச்சி ஆச்சரியமளிக்கிறது.
ஆரம்பத்தில் இளநாகன் ஏன் தொல்மதுரையில் இருந்து கிளம்புகிறான் என்று காட்டுகிறீர்கள் என யோசித்தேன். இந்த தொடர்ச்சியை உத்தேசிக்கிறீர்கள் என இப்போது புரிந்தது
சண்முகம்