Tuesday, December 2, 2014

கணிகனின் சொற்கள்





ஜெ

கணிகர் மகாபாரதத்தில் ஒரு தீயமனம் கொண்ட வைதிகர் மட்டுமே. அவரை இத்தனை பெரிய கதாபாத்திரமாக ஆக்கியது உங்கள் கற்பனை. சாணக்கியனுக்கு முந்தைய வெர்ஷன் போல தெரிகிறார். அவருக்கு சூது இயல்பாக வருகிறது. கெட்டவராக இருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் விஷயங்கள் ஒருவகையில் நிராகரிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன. அதைத்தான் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

அரசனின் கடமைகளாக அவர் முன்னர் சொன்ன கணிகநீதியும் சரி இப்போது அரசன் என்னென்ன கொலைகளைச் செய்யலாமென்று சொல்லும் இடமும் சரி அரசாங்கத்தின் பார்வையில் சரியே. இன்றைக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரனமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மொசாதோ சி ஐ ஏயோ அதைத்தானே செய்யும் என்று எவருக்கும் தெரியும்

அன்றைக்கும் இன்றைக்கும் அதிகாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் விதம் ஒன்றேதான்

ராமச்சந்திரன்