[பீமன் யட்சகானத்தில்]
ஜெ,
மகாபாரதத்தில் flat character அன்றால் அது பீமன் தான். பலம் என்ற அம்சம் தவிர எந்த சிறப்பையும் வியாசர் பீமனுக்குத் தரவில்லை. அவன் கோபம் கொண்டவனாகவும் மூர்க்கனாகவும்தான் காட்டப்பட்டிருக்கிறான்
பீமனை கொஞ்சம் complicated ஆக காட்டியது எம்.டி வாசுதேவன் நாயர் தான். அவருடைய மலையாள நாவலின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பை நான் வாசித்திருக்கிறேன். நல்ல நாவல். ஆனால் அதில் அவனுடைய உணர்ச்சிகள் எல்லாமே earthly ஆனவை. அந்த கதையின் surface க்குள் அது சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் classical முத்திரை இல்லை
பீமன் பாதாளத்தில் போய் விஷம் சாப்பிட்டு மீண்டு வந்தான் என்ற அம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு மேலே மேலெ கொண்டு சென்று நாகரீகம், அரசங்கம் , diplomacy எல்லாவற்றின் மீதும் ஒரு தீராத கசப்புள்ள காட்டு மனிதனாக அவனைக் காட்டுகிறீர்கள். ஓரளவு எம்.டியின் பீமனை மாதிரித்தான் இருக்கிறான் வெண்முரசின் பீமனும். ஆனால் இன்னும் grand ஆக இருக்கிறான். அதுக்கு ஒரு classical touch வருவது அந்த விஷ சம்பவத்தால்தான்.
சாரதி