Monday, December 1, 2014

கண்ணனின் வருகை



அன்புள்ள ஜெமோ,

எப்போதுமே சீனுவின் வாசிப்பு உங்கள் எழுத்தின் மிக அருகில் இருந்து கொண்டு இருக்கும் . மீண்டும் வெண்முரசு பற்றிய அவரது கடிதங்களில் மிக இயல்பாகவே கிடைக்கும் திறக்கும் அத்தனை வாசல்களிலும்  பறந்து நுழைகிறார்.

கண்ணனின் வருகை வெண்முரசு பற்றிய பார்வையே கொஞ்சம் மாற்றிவிட்டது உண்மை  தான். அவனது வருகையின் முந்தய அத்தியாயம் வரை பிரயாகை ஒரு வித பதட்டமான சூழலை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. உதாரணமாக,பாண்டவர்கள் செய்த சிறு பிழையில் தொடங்கி சிக்கல் மேலும் சிக்கலாகிக் கொண்டு இருக்க, விதுரர் முயற்ச்சிகள் தொல்வ்யுற , இரண்டு நாட்களாக 'என்னடா இது..' என்று நானே எதோ  சிக்கலில் மாட்டியது போல் இருந்தது.


கிருஷ்ணன் மிக  சாதரணமாக அதன் மீது அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சை போட்டுவிட்டு போகிறான்.ஆனால் இப்போது அந்த பதட்டம் இல்லை , எல்லாவற்றையும் ஒரு சின்ன புன்னகையுடன் வாசிக்க முடிகிறது. வாசிப்பின் இன்பமும் போனது போ.. ஒரு விதத்தில் வாசிப்பின் 'இன்பத்தை ' கூட தள்ளி நின்று பார்க்க வைக்கிறான் இந்த கள்ளப்பயல் .


-ஆனந்த் குமார்