ஜெ,
[துரியோதனன் கதகளியில்]
நான் அடிக்கடி நினைப்பதுண்டு ‘என்னதான் இருந்தாலும்’ என்ற வார்த்தையைப்போலமுக்கியமனா வார்த்தை வேறு கிடையாது என்று. சொல்லிப்பார்த்த வாழ்க்கை சந்தர்ப்பங்கலை எண்ணினால் அது எவ்வளவு முக்கிய்மானது என்று தெரியும். எல்லாம் சரிதான் ஆனாலும் அதை எல்லாம் தாண்டிய ஒன்று என்று அர்த்தம்
அந்தமாதிரி ஒரு சந்தர்ப்பம் இன்று [பிரயாகை 41] வந்தது. துரியோதனனின் பொறாமை வன்மம் ஆதிக்கவெறி எல்லாமே சரிதான். ஆனல் அரசனாகவே வளர்க்கப்பட்டவன் அவமதிப்புகளை தாங்கமுடியாமல் துவளும்போது என்னதான் இருந்தாலும் அவன் பாவம் என்றுதான் சொல்லத் தோன்றியது
விதி என்றுதான் அதைச் சொல்லவேண்டும். எத்தனையோ சொல்லலாம். வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. அதற்கு யாருமே பொறுப்பு கிடையாது.
எங்கே பிரச்சினை என்று யோசித்தபோது ஒன்று தோன்றியது. தீப்பிடிக்கும்போது கண்டதை தூக்கி போடுகிறோமே அதே மாதிரி கிரைஸிஸ்களில் நாம் மனிதர்களைப் பயன்படுத்திக்கொள்கிறோம். அவர்களின் மனசை பார்ப்பதில்லை. அரசியலில் அது அடிக்கடி நிகழும். அதுதான் பிரச்சினை
விதுரர் துரியோதனனை பயன்படுத்திக்கொள்கிறார். கிருஷ்ணனும் பயன்படுத்திக்கொள்கிறான். கிருஷ்ணன் வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்றும் தோன்றியது
ராம் மாதவ்