Monday, December 1, 2014

தர்மன்




தர்மன் பிரமாதமாக இருக்கிறான்..ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பாத்திரம் பிற எல்லோரையும் கடந்து அபாரமாக வெளிபடுவான்..முதற்கணலில் பீஷ்மர் - அம்பை - விசித்திரவீரியன் - சத்யவதி - வியாசன் - சிகண்டி என மாறி மாறி வசீகரித்துகொண்டே இருப்பார்கள்..

மழைபாடலில் குந்தியும் காந்தாரியும் பாண்டுவும்  திருதுருராஷ்டிரனும் விதுரனும் அற்புதமாக வருகிறார்கள்..இவனை போன்ற ஒரு ஆளுமை, ஈடிணையற்ற ஆளுமை உண்டா என கேட்கும் தோறும் வேறு ஒரு பாத்திரம் விஸ்வரூபம் எடுக்கும்..


தர்மனுக்கு மூல காவியத்தில் மிக முக்கியமான இடம் இருப்பதாலேயே அதன் மீட்டுருவாக்கங்களில் அவனை ஒரு சதிகாரனாகவும் சந்தர்ப்பவாதியாகவும் நோஞ்சானாகவும் சித்தரிப்பது மரபாக இருக்கிறது..குறிப்பாக இரண்டாம் இடத்தை உதாரணம் சொல்லலாம்..இன்று வெளிபட்டிருக்கும் தர்மன் வெண்முரசில் இதுவரை வெளிப்பட்ட தர்மன் அல்ல..அறமும் சகோதர பாசமும் கலந்த..தந்தைக்கு கடன்பட்டிருக்கும் தர்மன்..இனிவரும் அத்தியாங்களில் அவன் மேலும் விரிவான் ..


பீமன் கட்டற்றவனாக இருக்கிறான் ஆனால் அவன் மூடனாக இருக்கவில்லை..இவர்களில் அவனே ஆகசிறந்த நடைமுறை விவேகியாக வெளிபடுகிறான்..கடக வியூகத்தை கற்பனையில் விரிக்க தோதான நல்ல ஓவியம் நன்றி மணி/ ஷண்முகவேல்

சுனீல் கிருஷ்ணன்