Thursday, December 4, 2014

எதிர்நாயகன்


"ஊசிமுனை அளவு இடம் கூட இல்லை" , இவ்வார்த்தைகளை துரியன்  தூதுவனாக வந்து இறுதியில் ஒரு 5 வீடுகளாவது வழங்குக என இறுதி கட்டத்தில் கேட்கும் கிருஷ்ணனிடம் கூறுகிறான் , பாரதப் போர் துவங்குகிறது. இச் சொல்லுக்கான அனைத்து  வகை நியாயமும் பிரயாகையில் உள்ளது , காவியம் என்பது எதிர்நாயகனின் நாயகத் தன்மையையும் , அவன் செயல்பட நிர்பந்திக்கும் சூழலும் காட்டப் படுவது தானோ என்னவோ. இதுவரை துரியன் எனக்கு நாயகனாகவே தென்படுகிறான் , ராவனணனை திராவிடர்கள்  நாயகனாகும் பலவீனமனான சித்தரிப்பல்ல இவனுடையது.

தனது அத்தனை அகங்காரத்தையும் தர்மனின் கால் முன்வைத்து துரியன் படை கேட்கிறான், ஒரு மெய்காவல் படையாவது தனக்குத் தருமாறு இறுதி கட்டத்தில் மன்றாடுகிறான் மறுக்கப் படுகிறது.  தனக்கு எல்லையில் உள்ள ஒரு பாழ்நிலத்தையாவது  தருமாறு திருதிராஷ்டிரனிடம் கேட்கிறான் அதுவும் மறுக்கப் படுகிறது , படை கொண்டு வென்று ஒரு நிலத்தைத் தேடிக்கொள்கிறேன் என்கிறான் அதுவும் தடுக்கப் படுகிறது. இதுவே பின்நாளில் மறுமுனையில் நின்று ஊசி முனை இடத்தையும் தர மறுக்கக் காரணமாகிறது.  

இதுவே அரக்கு மாளிகை சதிக்கு அவனை ஒப்ப வைக்கிறது , சூதுக்கு தர்மனை தந்திரமாக அழைக்க வைக்கிறது. காயப்படுத்தப் பட்ட தன்னகங்காரம் எதையும் செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. 

கிருஷ்ணன்