அன்புள்ள ஜெ,
மிக சமீபமாக கிசோரி மோகன் கங்குலி மொழியாக்கம்
செய்த மகாபாரதத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
அதில் ஆதி பர்வத்தில் சொல்லப்பட்ட எண்ணற்ற கதைகளில்
மிக சுவாரஸ்யமான கருடனின் கதையை நீங்கள் எப்படி சொல்லப்போகிறீர்கள்
என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சரி, அதில் உள்ள அமானுஷ்யமான விவரனைகளை நோக்கும் போது, அதை சொல்லாமல் விட்டு விடுவீர்களோ
என்று
நேற்று ஐயப்பட்டேன். என்ன அதிசயம், அதை குந்தியின் வாயில் ஒரு கதை போல
அழகாக உள்ளே நுழைத்திருக்கிறீர்கள்!! அற்புதம்.
அதைக்குந்தியின் வாயால் குறிப்பாக இந்த இக்கட்டில் மாத்ரியின் மைந்தர்களுக்கு சொல்ல வைப்பதன் மூலம் அந்த
மூலக்கதையில் உள்ள பொறாமை(மாற்றாந்தாய் மைந்தருக்குள் நிகழும் போட்டி),
அதை வெல்லும் நம்பிக்கையை ஒரு தாய் தன் மைந்தர்களுக்கு அளிக்கும் கதையாக
வடிவமைத்திருப்பது மிகவும் சிறப்பு. இது போதும் ஏன் பாரதம்
திரும்பத்திரும்ப சொல்லப்படவேண்டும், திருத்தித்திருத்திச்சொல்லப் படவேண்டும் என்ற கேள்விகளுக்கு பதிலாக.