ஜெ
நீண்டகாலம் முன்பு நாங்கள் எல்லாரும் கும்பமோணத்திலே இருந்த நாட்களில் எங்கள் வீட்டிலே சில துர்மரணங்கள். பலவிதமான பிரச்சினைகள். ஒரு அக்காவுக்கு மனநிலை பிரச்சினை. மொத்தமாக வீடே பெரிய நரகம் மாதிரி ஆகிவிட்டது.
அப்போது ஒரு மாந்திரீகரை வரவழைத்து மந்திரம் செய்தோம். அவர் எங்களை எல்லாம் உட்காரவைத்து நிறைய பூசைகள் செய்தார். நடுராத்திரியில் எங்களைப்போலவே காகிதத்தில் செய்த ஒன்பது பொம்மைகளை எங்கள் கையிலே தந்தார். அதை எங்கள் பெயரைச் சொல்லி கூப்பிட்டு தீயிலே போட்டார்.
நாங்கள் எரிவதை நாங்களே பார்த்தோம். மறுநாள் முதல் பீடை விலகிவிட்டது என்று அவர் சொன்னார். உண்மையிலேயே எல்லாம் சரியாக்விட்டது. முப்பது வருஷம் ஆகியும் அந்த அக்காவுக்கு மறுபடி பிரச்சினை இல்லை.
அன்றைக்கு நடந்தது ஒரு சைக்காலஜிக்கல் டிரீட்மெண்ட் என்று எனக்கு இன்றைக்குத்தெரியும். ஆனால் அது எஃபக்டிவ் ஆக இருந்தது. நாங்கள் எரிவதை நாங்களே பார்ப்பது பெரிய ரிலீஃப் ஆக இருந்தது
அதைத்தான் இந்த அரக்குமாளிகையிலே பார்த்தேன். அற்புதமான ஒரு காட்சி அது. பாண்டவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்று பார்ப்போம்
எஸ்.