மீண்டும் முதற்கனல் - பொற்கதவம் படித்துக்கொண்டிருக்கிறேன்.
"வாஸ்துபுருஷன் வாழ்வது பிரிவற்ற அகண்ட காலத்தில். அதோ அந்தப் பாறை, இந்தத் தூண் அனைத்துமே முப்பிரிவில்லாத காலத்தில் நின்றுகொண்டிருப்பவை."
இந்த வரிகளை படிக்கும் போது தோன்றியது, இதுதான் இண்டெர்ஸ்டெல்லேர் படத்தில் புரிந்து கொள்ளமுடியாத ஒரு பகுதி. இந்தப்படத்தின் கதாநாயகன் சென்றடைவது வாஸ்து புருஷன் இருக்கும் இடத்திற்கு தான். அவன் சென்றடையும் இடத்தில் அவனால் காலத்தை பார்க்கமுடிகிறது, அவனது மகளிடம் தொடர்புகொள்ள முடிகிறது.
இந்திய கதைகளில் (மரபில்) எத்தனையோ முனிவர்கள், ஞானிகள் இதே இன்டர்ஸ்டெலர் பட கதாநாயகன் போல் இந்த மனித குலத்திற்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.கிழக் கு தனது ஆழ்மணதின் மூலம் அறிந்து கொண்டதை, மேற்குலகம் அறிவியல் பூர்வமாக உணர முயன்று கொண்டிருக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது. இந்திய கதைகளுடன் வளர்ந்த எனக்கு இந்த படம் சொல்லுவதை புரிந்துகொள்ள முடிகிறது, எந்த அறிவியல் தர்க்க உதவியும் தேவைல்லாமல்
ஸ்ரீராம் காமேஸ்வரன்