ஆழ்படிமங்களை(archetypes) பற்றி படித்து கொண்டிருந்த போது இந்த இருவிதமான ஆழ்படிமங்களை பற்றி படித்தேன். Anima என்ற இந்த ஆழ்படிமம் ஆணின் ஆழ்மனதில் இருக்கும் பெண். அவன் மனதில் பெண்மையாய் இது பிரதிபலிக்கிறது. இதே போல் தான் Animus என்பது பெண்களுக்கு ஆழ்மனதில் இருக்கும் ஆண். இந்த பெண் தன்மை ஆண் மனதில் தோன்றி சிறிய அளவில் அவன் செயல்களில், எண்ணங்களில் வெளிபடுகிறது. பெண்னுக்கு உண்டான குணங்களை ஆணில் உருவாக்குகிறது. ஒரு ஆண் இந்த anima என்ற பெண் படிமத்தை பிரதிபலிக்கும் பெண்ணை நேரில் பார்க்கும் போது அவள் மேல் கண்டதும் காதல் கொள்கிறான். குந்தியின் மேல் விதுரருக்கு வரும் காதலை போல.
துரியோதனன் இந்த அத்தியாயத்தில் காட்டில் ஒரு சுனை முன் நின்று அவனுள் இருக்கும் அந்த பெண்ணுருவை அடித்து கொல்கிறான். அது அவனது ஆழ்மனதில் இருக்கும் anima என்ற பெண் படிமம் என்று உளவியல் பூர்வமாக புரிந்து கொள்ளலாம். அந்த சுனை அவன் ஆழமனத்தின் குறியீடு. அவனுள் இருக்கும் பெண்மை முற்றிலும் விலகுவதால் அவனிடம் முற்றிலுமாக ஆண்மை குடி கொள்கிறது. எந்த ஆணும் செய்ய முடியாததை அவனால் செய்ய முடிகின்ற வலிமையை அடைகிறான்.
அதனால் அவன் உடலில் மாற்றம் வருகிறது. பெண்கள் கண்ணுக்கு அவன் பேரழகனாக தெரிகிறான். இதை அவர்களின் animus என்ற ஆண் படிமத்தை அவன் முற்றிலுமாக பிரதிபலிக்கிறான் என்று காட்டுகிறது. அவன் செயல்களில், எண்ணங்களில் அதுவே வெளிப்படுகிறது. அந்த வித்தியாசத்தை துச்சாதனனும் மற்ற கௌரவர்களும் சகுணியும் உணர்கிறார்கள்.
ஆனால் இதனால் அவன் இழக்க போவது என்ன? அவன் பெண் படிமத்தை அழித்து அவனை வலிமையாக்கி கொள்கிறான். இதனால் அவன் இழப்பது பெண்களின் மென்மை மட்டுமல்ல. பெண்களுக்கே சாத்தியமான பல குணங்களை ஆணின் உள்ளிருந்து சிறிதளவேனும் இயக்குகிறது அந்த பெண் படிமம். பெண்களுக்கே உரிய குணங்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் துரோணரின் மனைவி கிருபியை சொல்லாம். துரோணரும் அவளும் பேசி கொள்ளும் இந்த காட்சி ஒரு நல்ல சான்று.
தேனும் காமமும் அளித்த மயக்கத்தில் அவளுடனிருக்கையில் அவள் செவிகளில் அவன் சொன்னான். “முற்றிலும் நான் அறியாதவற்றால் ஆனவளாக இருக்கிறாய்.” அவள் சிரித்துக்கொண்டு “ஆமாம், ஆகவேதான் நான் பெண்” என்றாள். “நான் யார் உனக்கு? நீ அறியாதவற்றால் ஆனவனா?” என்றான். அவள் “இல்லை” என்றபோது அவன் சிறிய ஏமாற்றத்துடன் விலகிக்கொண்டான். அவள் அவன் தோளைத் தழுவியபடி “நான் ஆகமுடியாதவற்றால் ஆனவர்” என்றாள்.
அந்த பெண் படிமத்தை அவன் முற்றிலும் அழித்துவிட்டான். வெற்று வலிமை கொண்ட ஆண் மகன். அதுவே துரியோதனனின் பெரும் பலவீனம்.
ஹரீஷ்
https://en.wikipedia.org/wiki/ Anima_and_animus
https://www.youtube.com/watch? v=PjRQbJPULx4
வெண்முரசு விவாதக்குழுமத்தில்
மறுபிறப்பு
துரியோதனனின் மாற்றம்
துரியோதனை
துரியோதனன் துச்சாதனன்

https://en.wikipedia.org/wiki/
https://www.youtube.com/watch?
வெண்முரசு விவாதக்குழுமத்தில்
மறுபிறப்பு
துரியோதனனின் மாற்றம்
துரியோதனை
துரியோதனன் துச்சாதனன்