Thursday, December 11, 2014

இடும்பி கோயில்




மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சில விஷயங்கள். 

1) வாரணவதம் - யானையை (வாரணம்) கொன்ற இடம். அந்த இடத்தின் பெயர் விக்கிபீடியாவில் அதே தான். [Varnavat
http://en.wikipedia.org/wiki/Barnava
http://en.wikipedia.org/wiki/Lakshagraha]. தமிழ் பெயர் அங்கு சென்றிருக்குமா.

2) ராணுவத்தின் அளவு (http://venmurasudiscussions.blogspot.in/2014/11/blog-post_32.html) என்ற கடிதத்தில் ஜனத்தொகை பற்றி சொல்லி இருந்தீர்கள். நம்முடைய காலத்தில் பிள்ளைகள் (1/2) குறைவு. ஆனால் அந்த காலத்தில் ஒவ்வொருத்தருக்கும் 7-8 பிள்ளைகள் இருந்திருப்பார்கள் அல்லவா. போரினால் மக்கள் தொகை குறைந்தாலும், அதிகமான பிள்ளைகள் இருந்ததனால் தானே அதை ஈடு செய்திருப்பார்கள். ஆக மக்கள் தொகை அதிகமாக தானே இருந்திருக்கும். 

3) மகாபாரத அரசியல் பின்னணி (http://venmurasudiscussions.blogspot.in/2014/11/blog-post_136.html) பதிவு உதவியாக இருந்தது. "புராதன இந்திய என்னும் பழைய 56 தேசங்கள்" என்னும் புத்தகமும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  

4) இடும்பி கோவில் (மணாலியில் உள்ளது)
http://en.wikipedia.org/wiki/Hidimba_Devi_Temple

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.