Thursday, January 22, 2015

முகம்

     

அன்புள்ள ஜெ

     திரௌபதியின் தீயில் நீந்தும் சித்திரத்துடன் பிரயாகை முடிவடைந்தது.       அவள் முகம் தான் நாவலில் கடைசியாக எஞ்சி நிற்கிறது  

Was this the face that launch'd a thousand ships
And burnt the topless towers of Ilium  ..


என்று கிறிஸ்டபர்  மார்லோ எழுதிய கவிதை வரி நினைவில் வந்தது. பாரதப்போரை உருவாக்கிய முகம். லட்சம் வீரர்களை வில்லுடன் களத்திலே கொண்டுபோய் நிறுத்திய முகம் அது இல்லையா?

அதற்கு நமக்கு சரியான மெட்டபர் உள்ளது. அல்லது ஆர்க்கிடைப்பா? காளி. பேரருளும் பேரழகும் கொண்ட அழிவுச்சக்தி. அதை அற்புதமாக கொண்டுவந்து சேர்த்துவிட்டீர்கள்

சிவம்