ஜெ,
பிரயாகை திரௌபதியின் திருமனத்துடன் முடியும் என்றுநினைத்திருந்தேன். இலக்கிய நுட்பமென்று சொல்லமாட்டேன். 90 அத்தியாயம் ஆகிறதே அதனால்தான். ஆனால் மேலும் சில அத்தியயாங்கள் போய் முடிந்த இடம் சிறப்பாக இருந்தது. அது குறியீட்டுரீதியாக முக்கியமனது. திருதராஷ்டிரனின் மனம், விதுரரின் மனம் இரண்டும் சொல்லப்பட்டு பாண்டவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்று காட்டப்பட்டது. அற்புதமான அமைப்பு.
ஒவ்வொரு கொந்தளிப்பான பகுதி வந்தபிறகும் நுட்ப்பமான அமைதியான பகுதிகள் வெளிவருவதுதான் இதன் அமைப்பு. ஆரம்பம் முதலே அப்படித்தான். அதாவது துருபதன் தோல்வியடையும்பகுதி பரபரப்பானது. அதன்பின் அர்ஜுனனும் பீமனும் அடையும் மனமாற்றங்கள் நுட்பமானவை. அதன்பின் துருபதனின் சோகம் கொந்தளிப்பானது. அதேபோல சபையில் வில்லை வளைப்பது கொந்தளிப்பானது. அதன்பின் மீண்டும் மனோவியல் சிக்கல்கள்
இந்த அமைப்பு தானாக வந்தது என்றாலும் ஒரு சின்ன சிக்கலை அளித்தது. உத்வேகமாக வாசித்துவிட்டு வரும்போது ஓர் இடத்திலே வாசிப்புநின்றுவிட்டு மீண்டும் தொடங்கவேண்டியிருக்கிறது. எனக்கு இது கொஞ்சம் சிக்கலை அளித்தது ஆனாலும் முக்கியமான ஒரு பெரிய அனுபவம். சுழட்டிச் சுழட்டி அடிக்கக்கூடிய வாசிப்பு
திரௌபதியின் கதாபாத்திரம்தான் இந்த நாவலின் மையம். அவள் நேரடியாக வருவதில் இருந்து அவளை ஆரம்பிக்கக் கூடாது. துருபதன் தீரைப்பார்த்து நடனமிடுவதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். அப்படி ஆரம்பித்தால் கடைசியில் வரும் தீயை அறியும்போது பெரிய பரவசம் வரும். அந்தத்தீதான் இந்தத்தீ என்பது புரியும்
சாரங்கன்