ஜெ
ஐந்தாவது அம்பை தொடுப்பதற்கு முன்னாலும் பாஞ்சாலி மாலையிட வரும்போதும் அர்ஜுனனுக்கு வரும் தயக்கமும் பயமும் மகாபாரதத்தின் ஒட்டுமொத்த சாராம்சமும் எப்படி எல்லா கதையிலும் ஊடுருவியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாக உள்ளது. அந்த இடம் அர்ஜுனன் மகாபாரதப்போரில் தொடங்குவதற்கு முன் கையறு நிலையில் நின்று போரை தொடங்கமாட்டேன் என்று சொல்லும் அதே இடம்தான். அவனுக்கு உள்ளுணர்வு எப்படியோ எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. அவனுடைய புலன்களெல்லாம் கூர்மையாகவே உள்ளன
ஆனால் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்போதும் சரி கடைசியிலும் சரி. ஏனென்றால் விதி அவனைக்கொண்டுசெல்கிறது. அந்த இடத்தில் அர்ஜுனனை நினைக்கவே பாவமாக இருந்தது
சிவராம்